சிவதீட்சை பெறுவது எப்படி? அதற்குரிய தகுதி என்ன?
தீட்சை என்றால் அறியாமையைப் போக்கி நல்லறிவைத் தருவது என்று பொருள். இன்பமாய் வாழ்வதற்கு அடிப்படைக் காரணமே நல்ல அறிவு தான். ஆனால், தீய பழக்க வழக்கம் கொண்டவர்கள், தீமை புரிபவர்கள் பயத்துடன் வாழ வேண்டியுள்ளது. இவர்களுக்கு இறையருளும் கிட்டாது. இவர்கள் இப்படி செய்வதற்குக் காரணம் அறியாமை தான். படிப்பினாலோ, வயதினாலோ, செல்வத்தினாலோ இந்த அறியாமை இருளைப் போக்க இயலாது. நல்ல குருநாதரிடம் உபதேசம் பெற்று இறைவழிபாடு செய்பவர்களுக்கு மாத்திரமே அறியாமை நீங்கி, நல்லறிவும் இறையருளும் கிடைக்கும். இதற்குப் பெயர் தான் தீட்சை பெறுதல். தீய பழக்கங்களை விடுதல், தீய செயல்களைச் செய்யாதிருத்தல் ஆகியன தீட்சை பெறுவதற்கு அடிப்படைத் தகுதிகள். நிலையான இன்பமும் முழுமையான இறையருளும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலான தகுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக