புத்திர்பலர் யசோதைர்யம் நிர்பயத்துவம் மரோகதா
அஜாட்யம் வாக்படுத்தும்ச ஹனுமத் சரணாத் பவேத்
அஜாட்யம் வாக்படுத்தும்ச ஹனுமத் சரணாத் பவேத்
நமது மானுட வாழ்வில் முன்னேற்றங்களுக்கு அடிப்படையான குணங்கள் புத்தி,பலம், சமுகத்தில் நற்பெயர், தைரியம்,அஞ்சாமை, மூடத்தனம் இல்லாமை, பேச்சிதிறன் ஆகியவையாகும். இத்திறமைகள் அனைத்தும் அனுமனை நினைத்தாலே நமக்கு கிட்டிவிடுகின்றன என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
ராமாயணத்தில் எல்லா திறமைகளும் ஒருங்கே பெற்றவர் யார் என்றால் அது ஆஞ்சநேயர்தான். குழந்தை பருவத்தில் அன்மன் செய்த குறும்புத்தனங்களால் அவருடைய திறமை அவருக்கு தெரியாது என்று முனிவர்கள் சபித்து விட்டனர். சீதையைத்தேடி வானரர்கள் சென்றனர். இலங்கையில் சீதை இருப்பதாக சம்பாதி என்ற கழுகு தெரிவித்தது. ஆனால் இலங்கைக்கு கடலைத் தாண்டி செல்ல வேண்டுமே, எல்லோரும் தன்னால் முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
அனுமன் அமைதியாக இருந்தார். அப்போது அருகில் இருந்த ஜாம்பவான் அனுமனிடம் அவருக்குள்ள சக்தியை எடுத்துக்கூற புதுபிறவி எடுத்தார் அனுமன். அதன் பின் ராமாயணத்தில் அனுமன் தான் கதாநாயகன்.அதனால்தான் ராமாயணத்தில் அனுமன் சிறப்புகளை கூறும் அந்த பகுதிக்கு சுந்தரகாண்டம் என்று பெயர் ஏற்பட்டது.
கடலை மிக அலட்சியமாக தாணடிய அனுமன் இலங்கையை காவல் காக்கும் அரக்கியை ஒரே குத்தில் வீழ்த்தினார். பல இடங்களில் தேடி அசோகவனத்தில் சீதையைக்கண்டார்.தான் ராமனிடம் இருந்து வந்திருக்கும் தூதுவன் என்று சீதையை நம்பவைக்க அனுமன் காட்டிய வாக்கு சாதுர்யத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அத்துடன் அவர் திரும்பவில்லை அதன் தன் பலத்தைக் காட்ட அவர் செய்த சாகசங்கள் பற்றும் இலங்கைக்கு வைத்த தீ மூலம் ராமனை சந்திப்பதற்கு முன்பே இராவணனன் மனதில் பயத்தை ஏற்படுத்தினார். தனி ஒருவனாக இலங்கைக்கு சென்று சீதையை சந்தித்து இராவணன் மனதில் பயத்தை ஏற்படுத்தியவர் அனுமன்.
பின்னர் இராமனை சந்தித்து நடந்ததை கூறினார்.இலங்கைக்கு இராமன் படைஎடுத்து செல்லவும் அங்கு ராமர் வெற்றி காணவும் முக்கியமாக இருந்தவர் அனுமன்.ஆனால் இவ்வளவு திறமை இருந்தும் ஒரு சிறு கர்வம் இல்லாமல் ராமனுக்கு தாசனாகவே அனுமார் இருந்தார்.அத்துடன் சுக்ரிவனுக்கு சிறந்த மந்திரியாகவும் இருந்தார்.
சங்கீதத்தில் நாரத மகரிஷி மிகபெரிய மேதை.தன்னை மிஞ்சியவர் யாரும் இல்லை என்ற கர்வம் அவருக்கு இருந்தது. நாரதர் ஒருமுறை அனுமனை காண வந்தார் தன் இசையை பற்றி நாரதர் மிகவும் கர்வபடுவதை கவனித்த அனுமன் அவர் கர்வத்தை போக்க என்னினார்.மஹதி என்ற நாரதரின் வீணையை வாங்கி ஒரு பாறையின் மீது வைத்து குண்டகரியை என்ற ராகத்தை இசைத்தார் இசையின் உருக்கத்தால் பாறை உறுகியது.அதன் மீது வீணையை வைத்துவிட்டு இசையை முடித்துக்கொண்டார். அப்போது பாறை இருகி வீணை அதில் புதைந்து கொண்டது.நாரதர் தனது இசை ஞானத்தை எவ்வளவுதான் பயன் படுத்தினாலும் பாறையை உருகவைக்க முடியவில்லை நாரதரின் கர்வம் அடங்கியது. அனுமன் மீண்டும் தன் இசையினால் பாறையை உருகவைத்து வீணையை மீட்டு நாரதரிடம் அளித்தார்.

இப்படி அனுமனின் புகழையும் பெருமையையும் சொல்லிக்கொண்டே போகலாம் அனுமனை வழிபடுபவர்களுக்கு எல்லா திறமைகளும் கிடைக்கும்.
ஜெய் ஸ்ரீராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக