வியாழன், 5 பிப்ரவரி, 2015

                                                ஆயுள் வரை ஆன்மிகம்!



பெண்ணின்பமே பேரின்பம் என வாழ்ந்து கொண்டிருந்தார் ஒருவர். ஒருநாள் இரவு வேளை... மனைவியின் நினைவுடன் வீட்டுக்குச் செல்லும் போது பெருமழை பிடித்துக் கொண்டது. அதைப் பொருட்படுத்தாமல் வீடு நோக்கி நடந்தார். மனம் முழுவதும் அவளது நினைப்பு!வீட்டுக்குப் போக வேண்டுமானால், இடையிலுள்ள நதியை கடக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்ததால், ஓடக்காரன் வீட்டுக்கு போய் விட்டான். இவருக்கோ, எப்படியும் ஆற்றைக் கடந்து வீடு போய் சேர மனம் துடித்தது. ஆற்றில் பாய்ந்தார். ஏதோ ஒன்று கையில் சிக்கியது. கட்டையாக இருக்க வேண்டும்! அதைப் பற்றிக் கொண்டு கரை சேர்ந்து விட்டார். வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. விளக்கை அணைத்து விட்டு மனைவி உறங்கி விட்டாள் போலும்! மழையின் சப்தத்தில், அவர் கதவைத் தட்டிய ஒலி அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே மாடிக்கு ஏறுவதற்காக, மாடியில் இருந்து தொங்கிய கயிறைப் பிடித்து ஏறினார். ஒரு வழியாக மனைவி துõங்கும் அறைக்குள் நுழைந்தார்.திடுக்கிட்டு எழுந்த மனைவி, கணவன் அங்கே நிற்பது கண்டு, நீங்களா! இந்தக் கடும் மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்? வீடு வேறு பூட்டியிருந்ததே! என்றாள்.
நடந்ததைச் சொன்ன கணவர், அவளது ஸ்பரிசத்திற்காக கடலையும் கடப்பேன் என்று மோக வெறியில் ஆசைமொழி பேசினார்.மறுநாள் விடிந்தது. அவள் மாடிப்படியில் தொங்கிய கயிறைப் பார்த்தாள், அது கயிறல்ல, பாம்பு என்பது தெரியவந்தது. அவரை அழைத்து வந்து காட்டினாள். ஆற்றுக்கு நீராட இருவரும் சென்றார்கள். கரையில் அவர் பிடித்து வந்த கட்டை கிடந்தது. அருகே சென்று பார்த்தபோது, அது கட்டை இல்லை, ஆற்றில் அடித்து வரப்பட்ட பிணம் என்று தெரிந்தது. பார்த்தீரா! அழியும் என் உடல் மீது கொண்ட ஆசையில் என்னவெல்லாம் செய்திருக்கிறீர் என்று! இந்த உடல் தரும் சுகம் தற்காலிகமானது தான் இதன்மீது பற்றுக் கொண்டிருப்பதை விட, ராமநாமத்தின் மீது பற்றுக் கொண்டால், என்றும் நிரந்தர சுகம் தரும் வைகுண்டமே கிடைக்கும்! பிணத்தையும், பாம்பையும் கட்டிக்கொண்டு சுகம் பெற வந்த உம் நிலையை நீரே ஆராய்ந்து பாரும்! என்றாள்.அவருக்குள் ஏதோ பொறி தட்டியது. கேவலம்... ஒரு பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா! அவள் சொன்னது சரிதான். மனைவியென்றும் பாராமல் அவள் காலில் விழுந்தார். நீயே என் குரு என்றார். உடனேயே எழுதுகோலை எடுத்தார். ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். ஸ்ரீராமசரிதமானஸ் என்று பெயர் சூட்டினார். இப்போது புரிந்திருக்குமே! அவர் யார் என்று?ஆம்... துளசிதாசர் என்னும் மகான் தான் அவர். இவர் எழுதிய ராமசரித மானஸ் நுõலைத் தான் துளசி ராமாயணம் என்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக