தாயின் கருவறையினுள் 10 மாதங்கள் நடப்பது என்ன?
தாயின் கருவறையில் ஒரு குழந்தையின் பதிவு எப்படி நிகழ்கிறது? கரு உண்டாவதில் இருந்து, அது குழந்தையாகப் பிறக்கும் வரை தாயின் உடலுக்குள் நிகழ்வது என்ன?
தந்தையின் உடலில் இருந்து தோன்றிய விந்து, தாயின் கருப்பைக்குள் நுழையும்முன்... அந்த விந்துவில் இருக்கும் ஏராளமான உயிர் அணுக்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு ஓடும்
. அவற்றில் ஒன்றே ஒன்று மட்டும்தான் வெற்றி பெற்று கருப்பைக்குள் நுழையும்.
அவ்வாறு நுழைந்த ஆணின் உயிரணு, பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்து கரு உண்டாகும். அந்த இணைப்பு சரியாக நிகழாவிட்டால் கரு உண்டாகாது.
அவ்வாறு நுழைந்த ஆணின் உயிரணு, பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்து கரு உண்டாகும். அந்த இணைப்பு சரியாக நிகழாவிட்டால் கரு உண்டாகாது.
அதேநேரம், அவை சரியாக இணைந்திருந்தாலும் ஒரு பிரச்னை உண்டாக வாய்ப்புண்டு. அதாவது, ஆணின் உயிரணு பெண்ணின் கருப்பையில் நுழைந்தவுடன், தாயின் மஞ்சள் கருவில் இருந்து மெல்லியதான ஒரு சவ்வுப் படலம் தோன்றி, மற்ற உயிரணுக்களைக் கருப்பைக்குள் நுழைய விடாமல் கருப்பையின் வாசலை அடைத்துவிடும்.
இந்தச் செயல் சரிவர நடைபெறாவிட்டால், கரு உண்டாகாது. இந்தச் செயல் சரிவர நடந்து, வெற்றிகரமாக உண்டாகும் கரு முதல் மாதத்தில் ஒரு தான்றிக்காயின் அளவுக்கு இருக்கும்.
இரண்டாவது மாதத்தில்... நோய்கள், மயக்கம் போன்றவற்றால் தாயின் கருப்பையின் வாசல் மூடப்படாமல் போனால், அந்த மாதத்திலும் சில உயிரணுக்கள் உள்ளே நுழையும். அப்படி நுழைந்தால், அப்போதும் கரு உண்டாகாது. இப்படிப்பட்ட பிரச்னையிலும் தப்பி, இரண்டாவது மாதம் வெற்றிகரமாக கரு நிலைபெற்றுவிடுகிறது.

மூன்றாவது மாதத்தில்...
உருவான கரு நன்கு வளர வேண்டும் அல்லவா? அதற்காக, அதுவரை வெளியேறிக் கொண்டிருந்த தாயின் மதநீர் வெளியேறாமல், கருப்பையிலேயே தங்கும். அதனால் கருப்பை வீங்கும்; வயிறு சற்றுப் பெருத்துப் புடைக்கும். சில நேரங்களில் மதநீரைத் தாங்கமுடியாமல், கருப்பை கிழிவதும் உண்டு. இந்தப் பிரச்னையில் இருந்தும் தப்பி, இரண்டாவது மாதத்தைத் தாண்டி மூன்றாவது மாதமும் கரு நிலை பெற்று விடுகிறது.
நான்காவது மாதத்தில்.
.. கருப்பையில் கரிய நிறத்தோடு மதநீர் சேருவதால், பெரும் இருளாக இருக்கும். அந்தப் பேரிருளுக்கும் தப்பி, கரு நிலைபெற்றுவிடுகிறது.
ஐந்தாவது மாதத்தில்..
. கருப்பையில் மதநீரும் இருளும் அதிகமாகப் பெருகுவதால், சிலருக்கு இந்தக் காலத்தில் கருச்சிதைவு உண்டாகும். அதிலிருந்தும் தப்பி, கரு நிலைபெற்றுவிடுகிறது.
ஆறாவது மாதத்தில்..
. மெள்ள மெள்ளக் கரு வளர்கிறது அல்லவா? அந்த வளர்ச்சியால், கருப்பையில் வளரும் கருவுக்கு நெருக்குதல் உண்டாகும். இந்த மாதத்தில்கூட பலருக்குக் கருச்சிதைவு உண்டாகும். அதிலிருந்தும் தப்பி, கரு நிலை பெற்றுவிடுகிறது.
ஏழாவது மாதத்தில்.
.. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை நன்கு வளர்ந்து எல்லா உறுப்புகளும் ஒன்று கூடி உருவாகி இருக்கும். அப்போது அதனுடைய கனம் (எடை) தாங்காமல் கருப்பை கிழிந்து, குழந்தை வெளிப்படுவதும் உண்டு. அந்த ஆபத்தில் இருந்தும் தப்பி, வெற்றிகரமாக கரு நிலை பெற்றுவிடுகிறது.
8- 9 மாதங்களில்...
வயிற்றுக்குள் குழந்தை அசைந்து வளைய வரும். 'இந்தாங்க... இங்க பாருங்க! உங்க புள்ள உதைக்கிறான்!’ என்று மனைவி சந்தோஷக் கூச்சல் போடுவது இந்த மாதங்களில்தான். ஆனால், அதற்கு அவளது உடல் இடம் கொடுக்க வேண்டுமே! குழந்தையின் சுமை தாங்காமல் தாய் கஷ்டப்படுவாள். வயிற்றுக்குள் வளைய வரும் குழந்தையும் துயரப்படும். அதில் இருந்தும் வெற்றிகரமாகத் தப்பிவிடுகிறது குழந்தை.
பத்தாவது மாதத்தில்...
சொல்லவே வேண்டாம். எப்போது பிறக்கும்? எப்படிப் பிறக்கும்? தெரியாது. 'மழை பெய்யும் நேரமும் மகவு பிறக்கும் நேரமும் கடவுளுக்குத்தான் தெரியும்’ என்பார்கள். ஆயுத கேஸ், அவசர கேஸ், பனிக்குடம் உடைந்து போய்விட்டது என்றெல்லாம் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும். அந்தப் பிரச்னைகளில் இருந்தும் தப்பி, வெற்றிகரமாகக் குழந்தை பிறந்துவிட்டது!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக