வியாழன், 5 பிப்ரவரி, 2015

                                                    இது தான் பக்தி!


ஒரு முறை நாரதருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. கிருஷ்ணபகவான் ஏன் அர்ஜுனனிடம் மிகவும் பிரியத்துடன் இருக்கிறாரென்று. இதை அறிவதற்காக அஸ்தினாபுரம் செல்கிறார் நாரதர். அங்கே, கிருஷ்ண பகவானின் மடியில் தலை வைத்து அர்ஜுனன் உறங்குகிறான். நாரதருக்கு ஒரே ஆச்சரியம். நாரதரைக் கண்ட பகவான். அவர் எந்த நோக்கத்துடன் வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவரிடம் சொல்கிறார். அதோ, தரையில் கிடக்கிறதே ஒரு ஜீவனற்ற தலைமுடி, அதை காதில் வைத்துக் கேளுங்கள் நாரதரே... நாரதர். அதுபோல் அந்தத் தலைமுடியை காதுப் பக்கத்தில் கொண்டு செல்லும்போதே நாராயண நாரயண ! என்ற சத்தம் அதிலிருந்து கேட்கிறது. ஒரு ஜீவனற்ற முடி, அர்ஜுனனின் தலையிலிருந்து விழுந்தும், நாராயணன் நாமத்தைச் சொல்கிறதென்றால், பகவானிடம் அர்ஜுனனின் பக்தி எவ்வளவு மேம்பட்டது ! அதனால்தான் கிருஷ்ண பகவான், அர்ஜுனனிடத்தில் அதிக ப்ரேமையுடன் இருக்கிறார் என்பது நாரதமுனிக்குப் புரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக