சனி, 28 பிப்ரவரி, 2015

                                        கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?


                    ஒரு அறிவியல் பூர்வமான அலசல்
(இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்).

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

இராமாயாணத்தில் இவர்கள் யார்யார் தெரிந்து கொள்வோம்

1. அகல்யை - ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.
2. அகத்தியர் - ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்.
3. அகம்பனன் - ராவணனிடம் ராமனைப்பற்றி கோள் சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழைத்த அதிசய ராட்சஷன்
4. அங்கதன் - வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.
5. அத்திரி - அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.
6. இந்திரஜித் - ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன்.
7. கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.
8. கபந்தன் - தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்
9. குகன் - வேடர் தலைவன், படகோட்டி
10. கும்பகர்ணன் - ராவணனின் தம்பி, எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன்.
11. கும்பன் - கும்பகர்ணனின் மகன்
12. குசத்வஜன் - ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார்.
13. கவுசல்யா, கைகேயி, சுமித்திரை - தசரதரின் பட்டத்தரசியர்
14. சுநைனா - ஜனகரின் மனைவி, சீதையின் தாய்
15. கவுதமர் - அகல்யையின் கணவர், முனிவர்
16. சதானந்தர் - அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
17. சம்பராசுரன் - இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.
18. சபரி - மதங்க முனிவரின் மாணவ, ராமனை தரிசித்தவள்
19. சதபலி - வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
20. சம்பாதி - கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன்.
21. சீதா - ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.
22. சுமந்திரர் - தசரதரின் மந்திரி, தேரோட்டி
23. சுக்ரீவன் - கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன்.
24. சுஷேணன் - வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
25. சூர்ப்பணகை - ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள்.
26. தசரதர் - ராமனின் தந்தை
27. ததிமுகன் - சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர்
28. தாடகை - காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள்.
29. தாரை - வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.
30. தான்யமாலினி - ராவணனின் இளைய மனைவி
31. திரிசடை - அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.
32. திரிசிரஸ் - ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி.
33. நளன் - பொறியியல் அறிந்த வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்
34. நாரதர் - பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர்.
35. நிகும்பன் - கும்பகர்ணனின் மகன்
36. நீலன் - வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்
37. பரசுராமர் - விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர்
38. பரத்வாஜர் - பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்
39. பரதன் - கைகேயியின் மகன், ராமனின் தம்பி.
40. மந்தரை - கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர்.
41. மதங்கர் - தவ முனிவர்
42. மண்டோதரி - தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.
43. மாரீசன், சுபாகு - தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.
44. மால்யவான் - ராவணனின் தாய்வழிப்பாட்டன்.
45. மாதலி - இந்திரனின் தேரோட்டி
46. யுதாஜித் - கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன்
47. ராவணன் - மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.
48. ராமன் - ராமாயண கதாநாயகன்
49. ரிஷ்யசிருங்கர் - புத்திரகாமேஷ்டி செய்த முனிவர்.
50. ருமை - சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள்.
51. லங்காதேவி - இலங்கையின் காவல் தெய்வம்
52. வசிஷ்டர் - தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.
53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி - தசரதரின் மற்ற குருமார்கள்
54. வருணன் (சமுத்திரராஜன்) - கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்
55. வால்மீகி - ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்.
56. வாலி - இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.
57. விஸ்வாமித்ரர் - ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா - ராமன் திருமணத்திற்கு காரணமானவர்.
58. விராதன் - தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன்.
59. விபீஷணன் - ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.
60. வினதன் - கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன்.
61. ஜடாயு - கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.
62. ஜனகர் - சீதை, ஊர்மிளாவின் தந்தை.
63. ஊர்மிளா - லட்சுமணனின் மனைவி.
64. ஜாம்பவான் - கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர்
65. அனுமான் - அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள்.
66. ஸ்வயம்பிரபை - குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள்.
67. மாண்டவி - பரதனின் மனைவி.
68. சுருதகீர்த்தி - சத்ருக்கனனின் மனைவி.
                     ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.

துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.

ருத்ராட்ச மாலையை அணியும் முறை

குடுமியில் அணிய வேண்டியது - 1
தலை உச்சியில் அணிய வேண்டியது - 13
தலையில் அணிய வேண்டியது - 36
காதில் அணிய வேண்டியது 1 அல்லது 6
கழுத்தில் அணிய வேண்டியது - 32
புஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது - 16
ஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது  - 12
குடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது - 25
இம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 27,53 அல்லது 108.

ருத்ராட்ச வடிவங்கள்

ருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு முகம் - சிவ வடிவம்
இரு முகம் - தேவி வடிவம்
மூன்று முகம் - அக்னி சொரூபம்
நான்கு முகம் - பிரம்ம வடிவம்
ஐந்து முகம் - ருத்ர வடிவம்
ஆறு முகம் - சண்முக வடிவம்
ஏழு முகம் - அன்னங்கள் வடிவம்
எட்டு முகம் - கணபதி வடிவம்
ஒன்பது முகம் - பைரவர் வடிவம்
பத்து முகம் - திருமால் வடிவம்
11 முகம் - ஏகாதச ருத்திர வடிவம்
12 முகம் - துவாதச ஆதித்ய வடிவம்
13 முகம் - முருகன் வடிவம்
14 முகம் - சிவ வடிவம்

ருத்ராட்சையின் பிற பெயர்கள்

ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன.

ருத்ராட்ச சிவலிங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.

ருத்ராட்சத்தால் ஆன அம்மன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக ஏற்படும் நன்மைகள்





கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

                          குழந்தை பிறந்தால் எத்தனை நாள் தீட்டு

பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
பிறந்தது பெண் குழந்தையானால் கீழ் கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
அதுபோல குழந்தையின் தகப்பனாரின் சகோதரர்கள், குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார், (பிதாமஹர்) அவரின் சகோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
குழந்தை பெற்றவளின் சகோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவில் பிரசவம் நடந்தால், பிரசவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு.
ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். மூல புருஷன் எனப்படும் ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப் பேரனுக்கு மகன் - எள்ளுப் பேரனுக்குப் பேரன் வரையில் மூல புருஷனையும் சேர்த்து 7 தலைமுறைகள் ஆகின்றது. இதற்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் (ஜனனத்தாலும்) அல்லது இறப்பினாலும் (மரணத்தாலும்) அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
தீட்டு என்றால் என்ன? என்று கூட சிலர் கேட்கிறார்கள்.
தீட்டுக் காரியங்கள் நடக்கும் இடத்தின் மற்றும் பொருடக்களின் சம்மந்தம் ஆன்மீகம் மற்றும் விஜ்ஞான ரீதியாகவும் விலக்கத் தக்கது என்பது கருத்து. ஆன்மீகம் தீட்டு என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது. விஜ்ஞானம் ஹைஜீனிக் என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.
எனவே ஆன்மீக ரீதியாக யார் யார் எவ்வளவு நாட்கள் பிறரிடமிருந்தும், வழக்கமான மேம்பாட்டு வழிமுறைகள் நெறிமுறைகளிலிருந்தும் சில காரணங்களை உத்தேசித்து விலகி நிற்கச் சொல்கிறது.
உறவைக் கொண்டு அவர்களின் விலகி நிற்கவேண்டிய கால அளவை வெகு அழகாக நிச்சயித்துள்ளார்கள்.
உறவு உள்ள அளவிற்கு எங்களுக்கு நெருக்கமில்லை நாங்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.
இந்த உறவு இருப்பவர்களுக்கு இந்த அளவு நெருக்கம் இருக்கும் இருக்கவேண்டும் என்பது பொது விதி. அப்படி நெருக்கம் இல்லாதது விதிசெய்தவன் குற்றமல்ல. இதுபோன்ற விதிவிலக்குகளுக்காக வேண்டி விதியை மாற்றி அமைக்க முடியாது. எனவே (உறவு முறையில்) நெருக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறவுமுறையுடன் பிறந்து தொலைத்த காரணம் கருதி விதிப்படி அநுட்டிப்பதே விவேகமாகும்.
                                             கோவிலில் நாம் செய்ய கூடாதவை


1.கர்ப்ப கிரஹத்தின் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும்போது திரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது.
2.சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது.
3.பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது.
4.ஆலயத்தில் நண்பர்களையோ பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப் பெரியவன். அத்தகைய ஆலயத்தில் அனைவரும் சமம்.
5.விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றை கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல், கொட்டுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம்.
6.பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது.
7.கோவிலுக்குள்ளேயோ, கோவில் மதிற்புறங்களிலோ எச்சில் துப்புதல், மலம், ஜலம் கழித்தல் கூடவே கூடாது.
8.விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது.
9.கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணையை தலையில் தடவிக் கொள்ள கூடாது.
10.சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
11.சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது. அதிக அழுத்தமான வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தை திசை திருப்பிவிடும். எளிமையான கதர் துணிகளை அணிந்து செல்லுதல் கூடாது.
12. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. அடிமேல் அடி வைத்து வலம் வரவேண்டும். மிக நிதானமாக அனைத்து மூர்த்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும்.
13. எவருடனும் உலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பேசிக்கொண்டு கோவில்களில் வலம் வரக்கூடாது. ஆலயத்தினுள் தெய்வசக்தி நிரம்பியிருக்கும். அச்சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனையே மனம் முடிக்க நிரம்பி வலம் வருதல் வேண்டும்.
14. போதை வஸ்துக்கள், திண்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்ககூடவே கூடாது.
                                  மனிதர்களில் நீங்கள் எந்த வகை


மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது? என ஒரு ஞானி கூறுவதை கவனியுங்கள். பேராசைக்காரன், சராசரி மனிதன், உத்தமன், ஞானி என்ற நான்கு பிரிவுகளுக்குள் எல்லா மனிதர்களையும் வகையாக அடுக்கி விடலாம் எனப் பட்டியல் தருகிறார். அவற்களை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி ..
பேராசைக்காரன் - எல்லாமே என்னுடையது என்னுடையது. உன்னுடையதும் என்னுடையது என்பான்.
சராசரி மனிதன் - என்னுடையது என்னுடையது. உன்னுடையது உன்னுடையது என்பான்.
உத்தமன் - உன்னுடையதும் உன்னுடையது. என்னுடையதும் உன்னுடையது என்பான்.
ஞானி - உன்னுடையதுமன்று என்னுடையதுமன்று. எல்லாமே இறைவனுடையது என்பானாம்.
இதில் நீங்கள் எந்த வகை என்பது உங்களுக்கே தெரியும்.

                              குளிக்காமல் விபூதி பூசலாமா?




நீராடியபின் விபூதி பூசுவது தான் சரியானமுறை. உடல்நலக்குறைவு, வயோதிகம், ஆபத்து நேர்ந்த காலத்தில் குளிக்காமல் பூசுவதால் தவறில்லை. உடல் தூய்மையை விட உள்ளத் தூய்மையே முக்கியம் என்றாலும், இதையே காரணம் காட்டி சோம்பலும் எட்டிப் பார்த்து விடும். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள் எனவே இளைஞர்கள் குளியலுக்கு பிறகே திருநீறு பூச வேண்டும்.
                                               சிவனேனு இரு


சிவனேனு இரு என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?.. சிந்தனையை ஒருமுகப்படுத்தி இறைநினைப்பில் இருக்க வேண்டும் என்பதையே சிவனே என்றிரு என்று பெரியவர்கள் குறிப்பிட்டனர். திருமந்திரத்தில் திருமூலர், சிவ சிவ என்றிட தீவினை மாளும் என்கிறார். அவ்வையார், சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

                                                          108ன் சிறப்பு தெரியுமா?
படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.
* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.
"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).
                           ஆமை புகுந்த வீடு உருப்படாது சரியா,தவறா???
"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.
இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.
அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான் :-
"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)
இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது எனும் பழமொழிக்குப் பலப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. அதாவது, கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமை என்ற ஈற்றில் முற்றுப்பெறும் சொற்கள் நிறைந்திருக்கும் இல்லங்கள் முன்னேறுவது கடினம். இந்த பொருளும் அதைசார்ந்ததுதான்
ஆம்பி பூத்த= ஆமி பூத்த= ஆமெ பூத்த =ஆமெ பூந்த = ஆமை புகுந்த
                                       கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்!


கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள் கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி மார்க்கட்டில் உலா வருகின்றன.
கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்
கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.
கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா என்று தான் கூற வேண்டும். தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுதும் சுமார் 41/2 லட்சம் ஏக்கரில் ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் பயிராகும் அனைத்து பழ வகைகளில் மொத்த எடையில் இது 9 சதவிகிதமாகும்.
கொய்யப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றின் உட்புற நிறத்தைக் கொண்டு அதை சிவப்புக் கொய்யா என்றும் வெள்ளைக் கொய்யா என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் சத்தைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.
கொய்யாப் பழங்களிலும், கொட்டையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
                                                         வேம்பு தோன்றிய கதை







நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா? பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
கக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு நோய் என்பதே கிடையாது.
வேம்பின் மருத்துவ குணங்கள்: வேம்பு வீக்கம், கட்டிகளைக் கரைத்தல்,சிறுநீர் பெருக்குதல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.
வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும். 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.
                        பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்?



கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..
கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.
மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.
மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.
                                               கண்திருஷ்டி உண்மையா?



உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பு கண். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லக் காரணம் கண்கள் தான். நேர்மையானவர்கள் மற்றவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவர். ஆனால், பொய் சொல்பவர்கள் நேருக்கு நேர் பேசத் தயங்குவர். அன்பு, கருணை, பாசம், காதல், ஆசை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒருவரின் கண் வழியே மற்றவருக்குப் பரவுகின்றன. இதில் மற்றவரைப் பெரிதும் பாதிப்பது பொறாமை. அதையே கண்திருஷ்டி என்கிறார்கள்.
குழந்தைகள் தவறு செய்து விட்டு விழித்தால், முழிக்கிற முழியைப் பாரு என்று சொல்வது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. . பிறந்த குழந்தையை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றவே கருஞ்சாந்துப் பொட்டு வைப்பர். கட்டடங்கள் எழுப்பும்போது பூதம் போன்ற பொம்மை வைப்பதும் திருஷ்டியிலிருந்து தப்புவதற்குத் தான். கிராமப்புறங்களில் திருஷ்டி கழிக்க உப்பையும், மிளகாயையும் சேர்த்து தலையைச் சுற்றி நெருப்பில் போடுவது வழக்கம். வியாபார நிறுவனங்களில் செவ்வாய், வெள்ளி தேங்காய் உடைப்பதும் திருஷ்டிக்காகவே. உக்ர தெய்வங்களான காளி, நரசிம்மர், துர்க்கை போன்ற தெய்வ வழிபாடு செய்யும் இடங்களில் மட்டும் திருஷ்டிதோஷம் இருப்பதில்லை. தற்போது கண்திருஷ்டி கணபதி வழிபாடு பெருகியுள்ளது. 
                             கொடிய பாவங்களையும் விரட்டும் பாதாள பைரவர்!



ராமேசுவரம் கடலோரத்தில் ராமர் சிவபூஜை செய்தபோது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வது என தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க சிவபெருமான் பைரவரை அனுப்பினார். பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே பைரவர் அமர்ந்து விட்டார். இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இதனால் இவருக்கு பாதாள பைரவர் என்று பெயர். இவரது சன்னதி கோடி தீர்த்தம் அருகில் உள்ளது
                                                    திருமாலின் தசாவதாரம்!



வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.
மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.
கூர்மாவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.
வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.
நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.
வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.
பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.
ராமாவதாரம்: ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.
பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.
கிருஷ்ணாவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.
கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
                                         பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்





பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது.
01. மச்சாவதாரம்
சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
02. கூர்மாவதாரம்
திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.
03.வராக அவதாரம்
இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
04.நரசிம்மஅவதாரம்
தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.
05.வாமன அவதாரம்
மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.
06.பரசுராம அவதாரம்
ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.
07.ராமாவதாரம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார். சிவலிங்கம் சமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.
08. பலராம அவதாரம்
திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில் பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.
09.கிருஷ்ண அவதாரம்
கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குரு÷க்ஷத்ர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது.
                                    கோயில் சொத்தில் கை வச்சா என்னாகும்?


ராமராஜ்யம் அயோத்தியில் நடந்து கொண்டிருந்த போது, மக்கள் யாராவது குறைகளைச் சொல்ல வருகிறார்களா என காவலர்களிடம் அக்கறையுடன் கேட்பார். இல்லை என்றே அவர்கள் பதிலளிப்பர். ஒருநாள் ஒரு நாய் ரத்தக்காயத்துடன் ஓடி வந்து ராமனைப் பார்க்க வேண்டும் என்றது. நாயை உள்ளே அனுமதிக்கச் சொன்னார் ராமர். ராமராஜ்யத்தில் எல்லா உயிர்களும் சமமே. ராமா! உன் ஆட்சியில் எனக்கு ஏற்பட்ட அவலத்தைப் பார்த்தாயா! ஒரு சன்னியாசி, சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை கல்லால் அடித்து விட்டான். காரணமே இல்லை, என்றது. சன்னியாசி இழுத்து வரப்பட்டார். ஏன் நாயை அடித்தீர்? அதுவா ராமா! நான் பிச்சை கிடைத்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவன். இன்று பிச்சை கிடைக்கவில்லை. நான் பட்டினி கிடக்கிறேன்.
இந்த நாய், என் முன்னால் தனக்கு கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்த நாய்க்கு கிடைத்தது எனக்கு கிடைக்கவில்லையே என்ற எரிச்சலில் அடித்தேன்,. கொடியவனே! வாயில்லா ஜீவனை வதைத்திருக்கிறாயே! உனக்கு மரணதண்டனை,. அப்போது நாய் சொன்னது. ராமா! மரணதண்டனை போதாது. அதை விட கொடிய தண்டனை தர வேண்டும்,. ராமன் ஆச்சரியப்பட்டார். மரணத்தை விட கொடியது எது? என்றார். நான் சென்ற பிறவியில் ஒரு கோயில் அறங்காவலராக இருந்து, அங்குள்ள சொத்துக்களைச் சாப்பிட்டேன். அதனால் இப்போது நாயாகப் பிறந்து, குப்பையில் கொட்டுவதைச் சாப்பிடுகிறேன். கல்லடி வாங்குகிறேன். இவரையும் ஒரு கோயில் அறங்காவலரா போடுங்க! இந்த ஆள் நிச்சயம் கோயில் பணத்தை தின்பான். என்னை மாதிரி நாயா பிறந்து கல்லடி படட்டும், என்றது நாய்.
                                   கோயிலுக்கு கொடிமரம் அமைப்பது ஏன்?





கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.
ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். கொடிமரம் சிவபெருமான்; கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும். திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைந்து கொடி மரத்தை சூக்கும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
சிவன் கோயிலில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைத்திருப்பார்கள். துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.
                                    கஷ்டங்களை ஏன் கடவுளிடம் சொல்கிறோம்?







நம் பாவத்துக்கு பலனாக கஷ்டங்கள் வருகின்றன. என் மனமறிந்து யாருக்கும் எந்தக் கேடும் செய்யவில்லையே, அப்படியிருந்தும் ஏன் இந்தக் கஷ்டம்? என்றால், முற்பிறவியில் செய்ததன் பலனை அனுபவிப்பீர்கள். அப்படியானால் கஷ்டம் நிஜம் என்று ஆனபிறகு, கடவுளை வணங்குவானேன்! அதை அனுபவித்து விட்டு போய்விடுவோமே என்றால், கஷ்டத்தை தாங்கும் சக்தியில்லை. இந்த சமயத்தில் நாம் கடவுளை துணைக்கு அழைக்கலாம். எப்படி தெரியுமா? நீலகண்டதீட்சிதர், அன்னை மீனாட்சியை துணைக்கு அழைத்த மாதிரி! ஆனந்த ஸாகர ஸ்தவம் என்ற தனது நூலில், அவர், அம்மா மீனாட்சி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும், உன்னிடம் கஷ்டங்களை வாய்விட்டு சொல்லாவிட்டால், மனம் புண்ணாகிறது. வாய்விட்டுச் சொல்வது ஆறுதல் தருகிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன், என்கிறார். நாமும், நம் கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிட்டு மனதில் இருக்கும் பாரத்தைக் குறைப்போம். மனச்சாந்தி பெறுவோம்.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

அருள்மிகு கல்யாண சுந்தரேசுவரர் ஆலயம் திருமுல்லைவாயல் ஸ்தல வரலாறு எனக்கு தெரிந்தது.
இங்கே மூலவர் கல்யாண கோலத்தில் கோபத்தில் எழுந்தருளியிருப்பார்.அனைத்து சிவாஸயங்களிலும் நந்தி தேவர் மூலவரை பார்த்ப்படி இருப்பது தெரிந்ததே.ஆனால் இங்கே மணமகனை சமாதானப்படுத்தி அழைத்துப் போவதற்காக திரும்பிய படி இருப்பார். 
திருமணம் ஆகாதவர்கள் இங்கே சென்று வந்தால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
                                     கோயிலில் பலி பீடத்தை தொட்டுக் கும்பிடலாமா?





கோயிலில் கோபுர வாசலுக்கும், கொடிமரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு பலிபீடம் என்று பெயர். நித்யபூஜையின்முடிவில், பலிபீடத்தில் கோயிலிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனைதெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது.இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்கிறது ஆகமங்கள்.
                                                    96 வகை சிவலிங்கங்கள்!

ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:

சுயம்பு லிங்கம் - தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.

தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.

அர்ஷ லிங்கம் - ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.

மனுஷ்ய லிங்கம் - சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.

இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.

க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.

வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.

ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது. பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.

களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன. சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.

1. கந்த லிங்கம் : சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.

2. புஷ்ப லிங்கம் : பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.

3. கோசாக்ரு லிங்கம் : பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.

4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.

5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.

6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.

7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.

8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.

9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.

10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் : வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.

11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.

12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.

13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.

14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.

15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.

17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.

18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.

19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.

20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.

21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.

22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.

23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.

25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.

26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.

27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.

28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.

29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.

30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.

31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.

மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்!