கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்கள் . முதல்வருடனான கூட்டத்தை முடித்து திரும்பிய திரு . உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது , கூடங்குளம் அணுமின் நிலையத்தை எரிவாயுவால் இயக்க முடியும் என்றும் , இது போல உலகத்தில் ஏற்க்கனவே நிகழ்ந்து இருப்பதாக 3 மின் நிலையங்களின் பெயரையும் குறிப்பிட்டார் . இந்த தகவலை ஆராய்ந்து பார்த்தால் , திரு . உதயகுமார் அறிந்தோ / அறியாமலோ தமிழக மக்களையும் , தமிழக முதல்வரையும் ஏமாற்றும் தகவலை சொல்லி உள்ளார் என்பது புலனாகிறது ..
.
இந்த சம்பவங்கள் குறித்து நான் பல பதிவுகள் ஏற்கனவே எழுதி இருந்தாலும் , சில பதிவுலக நண்பர்களும் இதை வலியுறுத்தி எழுதுவதால் , இது குறித்து மிகவும் விளக்கமாக எழுத ஆசைப்பட்டதே இந்த பதிவு . பொறுமையுடன் படியுங்கள் .... கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் .
செய்தியாளர்களிடம் திரு . உதயகுமார் பேசும் பொழுது கீழ்க்கண்ட மூன்று அணுமின் நிலையங்கள் Gas மற்றும் நிலக்கரி மூலம் இயங்கும் மின் நிலையங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக கூறினார் .
- அமெரிக்காவில் உள்ள ஷோர்ஹாம் அணுமின் நிலையம்
- ஓஹியோ மாகாணம் , மாஸ்கோ என்னும் இடத்தில உள்ள வில்லியம் ஹெச். ஜிம்மர் மின்திட்டம்
- மிக்சிகன் மாகாணம் , மிட்லேன்ட் அணுமின் நிலையம்
எனவே இவற்றின் உண்மை பின்னணி குறித்து விளக்கமாக நாம் காண்போம் .
அமெரிக்காவில் உள்ள ஷோர்ஹாம் அணுமின் நிலையம் .
ஏப்ரல் 13 , 1965 ம ஆண்டு இந்த மின்திட்டம் துவக்கத்தை குறித்து LILCO ( Long Island Lighting Company ) நிறுவனத்தின் தலைவர் தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர் கூட்டத்தில் அறிவித்தார் . அதன் படி நியூயார்க் அருகில் உள்ள ஷோர்ஹாம் என்ற இடத்தில 1973 ம வருடம் தொடங்கப்பட்டு 1984 ம வருடம் கட்டி முடிக்கப்பட்டது
3 mile தீவு விபத்திற்கு பிறகு , இந்த பகுதி மக்கள் அணுமின் நிலயத்திற்கு எதிராக போராடினார்கள் என்பது உண்மை தான் . ஆனால் அணுமின் நிலையம் மூடப்படத்தின் உணமையான காரணம் பின்வருமாறு :- இந்த அணுமின் நிலையத்தின் கட்டுமானம் Nuclear Regulatory Commission and the Atomic Energy Commission போன்றவற்றின் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை . அதனால் இந்த அணுமின் நிலயத்தின் கட்டுமான தரம் கேள்விக்குறியானது ..... தகவலுக்கு : http://www.eoearth.org/article/Shoreham_Nuclear_Power_Plant
- இந்த அணுமின் நிலையம் அரசால் நேரடியாக கட்டப்படவில்லை . ஒரு தனியார் நிறுவனத்தால் ( தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Long_Island_Lighting_Company ) கட்டப்பட்டது . மேலும் இந்த நிறுவனம் தயாரித்த அவசர கால திட்டம் அரசால் ஏற்றுகொள்ள முடியாததால் இந்த மின் நிலையத்தின் செயல்பாடு அரசால் நிறுத்தப்பட்டது .
மாத்திரமல்ல இந்த அணுமின் நிலையம் தனியாரால் கட்டப்பட்டதால் , இந்த அணுமின் நிலையத்தின் உபகரனகள் ( Turbine ) போன்றவை வேறு ஒரு அணுமின் நிலையத்தில் ( Davis-Besse Nuclear Power Station ) பயன்படுத்தப்பட்டது . அதாவது அணுமின் நிலையத்தை அப்படியே Gas Fired power station ஆக மாற்றமுடியாது என்பது விளங்குகிறது அல்லவா .... தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு காரணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தான் அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Shoreham_Nuclear_Power_Plant
அணுமின் நிலையத்தின் Power Transmission system மாத்திரம் அப்படியே வைக்கப்பட்டு 2002 ம ஆண்டில் 100 MWe மின்சாரம் தயாரிக்கும் Gas Fired மின் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது . ஏற்கனவே அமைக்கப்பட்ட அணுமின் நிலைய உணகரனங்களை நீக்குவதற்கும் , புதிய Gas Fired மின் நிலையம் அமைப்பதற்கும் 186 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Shoreham_Nuclear_Power_Plant
ஓஹியோ மாகாணம் , மாஸ்கோ என்னும் இடத்தில உள்ள வில்லியம் ஹெச். ஜிம்மர் மின்திட்டம்
சின்சினாட்டி gas & electric நிறுவனத்தால் Ohio மாகாணத்தில் உள்ள மாஸ்கோ என்ற இடத்தில 230 மில்லியன் டாலர் செலவில் அணுமின் நிலையம் கட்டப்பட ஆரம்பித்தது . இந்த அணுமின் நிலைய திட்டம் 1983 ம வருடம் கைவிடப்பட்டு கூடுதலாக 100 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டு கிட்டதட்ட 3 . 4 பில்லியன் டாலர் செலவில் ( 1984 ம வருட கணக்கின் படி ) அனல் மின் நிலையமாக மாற்றப்பட்டது . ஏன் அப்படி செய்யப்பட்டது என்பதை நாம் காணலாம்
97 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட அணுமின் நிலையத்தின் முக்கிய Pipe line யை சோதித்து பார்க்கும் பொழுது மிக மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டு இருந்ததால் Nuclear Regulatory Commision 2 லட்சம் டாலர் அபராதத்தை சின்சினாட்டி gas & electric நிறுவனத்தின் மீது விதித்தது . மேலும் இந்த தனியார் நிறுவனம் முதல் முதலாக அணுமின் நிலையத்தை கட்டியபடியால் , தரம் குறைந்த உபகரனகளையும் , தரம் குறைந்த கட்டுமானத்தையும் கொண்டு இருந்த படியால் , அணுமின் நிலையம் திட்டம் கைவிடப்பட்டது . இந்த அணுமின் நிலையத்தை அனல் மின் நிலையமாக மாற்ற அணுமின் நிலையத்திற்கு அமைக்கப்பட்ட Cooling tower தவிர மற்ற அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/William_H._Zimmer_Power_Station
மிக்சிகன் மாகாணம் , மிட்லேன்ட் அணுமின் நிலையம்
Midland Cogeneration Venture என்ற நிறுவனத்தால் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த அணுமின் நிலையம் ஏன் Gas fired மின் நிலையமாக மாற்றப்பட்டு என்று நாம் பார்த்தால் , அந்த கட்டுமானம் மோசமான தரத்தினால் கட்டப்பட்டது மற்றும் அதன் தரைபகுதி மூழ்கவும் ( கட்டுமானத்தில் இருக்கும் போதே ) தொடங்கி விட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Midland_Cogeneration_Venture . அணுமின் நிலையம் கட்டுவதற்கு செலவழிக்கப் பட்டதை போல இரு மடங்கு செலவழிக்கப்பட்டு ( 500 மில்லியன் டாலர் ) , இந்த அணுமின் நிலையம் , Gas fired மின் நிலையம் ஆகா மாற்றப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Midland_Cogeneration_Venture
மேற்க்கண்ட சம்பவங்களை நாம் பார்க்கும் பொழுது , நாம் கவனிக்கவேண்டிய சில விடயங்கள் உள்ளது . அவை .....
- மேற்கண்ட அணுமின் நிலையனகள் அனைத்தும் தனியார் கட்டியது . ஆனால இந்திய அணுமின் நிலயங்கள் அனைத்தும் இந்திய அணுசக்தி கழகத்தால் கட்டப்படுகிறது .
- மேற்கண்ட அனைத்து அணுமின் நிலையங்களின் கட்டுமானம் அனைத்தும் தரமற்றவை மற்றும் பாதுகாப்பற்றவை ஆக இருந்ததினால் தான் அவைகள் மாற்றப்பட்டது . தரமான , மற்றும் பாதுகாப்பான மற்ற அணுமின் நிலையங்கள் ஏன் மாற்றப்படவில்லை ....? கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு காரணிகள் மத்திய , மாநில குழு வல்லுனர்களால் சான்றளிக்கப்பட்டு இருக்க திரு . உதயகுமார் இப்படி கேட்பது எதற்கோ ...?
- மேற்கண்ட மூன்று அணுமின் நிலையங்களும் வேறு நிலையங்களாக மாற்றப்படுவதற்கு ஏறத்தாழ இரு மடங்கு செலவு செய்யப்பட்டுள்ளது . அதாவது அந்த தொழில்நுட்பம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளது . ஆனால் திரு . உதயகுமார் அணுமின் நிலையத்தை அப்படியே Gas Fired powed Station ஆக மாற்றமுடியும் என்று எப்படி சொல்லுகிறார் ...?
- மேற்கண்ட விடயங்கள் முழுவதும் திரு . உதயகுமாருக்கு தெரியாதா ...? அல்லது வேண்டும் என்றே மக்களை குழப்புகிறாரா ....? முதல்வரையும் சேர்த்து ...
- சமையலுக்கே எரிவாயு ஒழுங்காக கிடைக்காத இந்த சமயத்தில் அண்ணாச்சி உதயகுமார் எரிவாயுவை எங்கிருந்து கொண்டுவருவார் என்பதும் விளங்காத காரியம் தானே ....!
இவைகளை கவனித்து பார்க்கும் பொழுது திரு . உதயகுமார் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் முட்டாள்கள் என்று நினைத்து விட்டார் என்றே தோன்றுகிறது ...... தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை திரு . உதயகுமார் உணரும் நாள் வரை நானும் காத்திருக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக