வியாழன், 22 மார்ச், 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி


மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24 நாடுகள் ஒட்டளித்துள்ளன. முடிவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நடந்த புலிகள் ஒழிப்பு நடவடிக்கையில் இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும், இங்கு நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பான விவாதங்கள் கடுமையாக நடந்தன. இந்த விவாதம் முடிந்த நிலையில் சற்று முன்பு நடந்த ஓட்டடெடுப்பில் இந்தியா, உள்ளிட்ட 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக