ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சீனாவில் ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டிநடந்தது. இந்த போட்டியில் இறுதி போட்டிக்கு பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. இதனால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி பட்டம் வெல்லும் என இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டியில் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர். ஆனாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து பெனால்டி மூலம் இந்திய அணி பாகிஸ்தானை 4-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக