வியாழன், 1 மார்ச், 2012

கூடங்குளம் பணம்


கூடங்குளம் அணு ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் வந்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றான குட் விஷனின் டைரக்டர் மனோ தங்கராஜ், “எமது நிறுவனம், கூடங்குளம் போராட்டத்துக்காக வெளிநாட்டு நிதியுதவி பெறுகிறது என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது.  கூடங்குளம் திட்டத்துக்கு தனிப்பட்ட முறையில் நான் எதிர்ப்பு தெரிவிப்பது வேறு விஷயம். அதற்கும், நான் டைரக்டராக உள்ள நிறுவனத்துக்கும் தொடர்பு கிடையாதுஎன்று கூறியுள்ளார்.
கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதியுதவி வந்து பாய்வதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. ஆனால், நிதி எப்படி வந்து சேர்கிறது என்பதில்தான் லேசான குழப்பம் உள்ளதாக தெரிகிறது.
குட் விஷன் நிறுவனத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு நிதியுதவி ஏதும் கிடைக்கவில்லை. இதை எமது வெளிநாட்டு நிதி வரும் பேங்க் அக்கவுண்டில் இருந்தே உறுதி செய்து கொள்ளலாம்என்பது மனோ தங்கராஜின் கூற்று.
குட் விஷன் நிறுவனம் வெளிநாட்டு நிதியுதவி வந்து சேர்வதற்காக சின்டிகேட் பேங்கில் ஒரு கணக்கு வைத்திருப்பதாக தெரிகிறது. கன்யாகுமரி மாவட்டம் கருங்கல் என்ற இடத்திலுள்ள சின்டிகேட் வங்கிக் கிளையில் இந்த கணக்கு மெயின்டெயின் பண்ணப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து நேரடியாக அந்த வங்கிக் கணக்குக்கு சமீபத்தில் பணம் வரவில்லை என்பது, நிஜம்தான்.
ஆனால், இப்படியான விவகாரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை, மத்திய ரிசர்வ் பேங்கின் கண்காணிப்பில் உள்ள இதுபோன்ற வங்கிக் கணக்குக்கு யாரும் அனுப்ப மாட்டார்கள். அப்படி வரும் பணம் சுலபமாக ட்ராக்-டவுன் செய்யப்படலாம் என்பதை தெரியாத முட்டாள்கள் அல்ல, வெளியேயிருந்து நிதி அனுப்பும் ஆட்கள்.
தமிழகத்தில் உள்ள எந்த என்.ஜி.ஓ.-வின் வங்கிக் கணக்குக்கும் இந்தப் பணம் நேரடியாக வந்து சேரவில்லை. போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்காக எங்கோஒரிஜினேட் பண்ணிய பணம், ஜேர்மனியில் இயங்கும் என்.ஜி.ஓ. ஒன்றின் ஊடாக கேரளாவில் உள்ள சில என்.ஜி.ஓ.-களுக்கு வருகின்றது.
கேரளாவில் இருந்து நாகர்கோவில் கடந்து கூடங்குளம் வந்து சேர்கிறது!
மத்திய உளவுத்துறைகளிடம் சங்கடத்துக்குரியஇந்த விபரங்கள் நிச்சயம் இருக்கும். இந்த இன்டர்நேஷனல் ரிங்கை ஹேன்டில் செய்வதால் அரசியல் ரீதியான சிக்கல்கள் எழும் என்ற தயக்கம் இருக்கும் என்பது அதைவிட நிச்சயம்.
ஒருவேளை உதயகுமாருக்கும் தெரிந்திருக்குமோ? அவர் கேரள பல்கலைக்கழகத்தில் படித்தவர். அமெரிக்காவில் ஹவாயிலும் இன்டியானாவிலும் 12 ஆண்டுகள் வசித்தவர் என்பதால், இப்படியான விவகாரங்களை அவர் அறிந்திருக்கலாம் அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக