வியாழன், 18 டிசம்பர், 2014



தேசபிரிவினையின் சோக  வரலாறு - 1


ஒன்றுபட்ட பாரதம்
1929ம் ஆண்டு.  நள்ளிரவு, டிசம்பர்  மாதம்  31 ஆம்  தேதி, காங்கிரஸ் அன்றுதான்  முதல்முறையாக  பூரண  ஸ்வராஜ்யம்  அடைந்தே  தீருவோம்  என்ற  முழக்கத்தை  தீர்மானமாக  கொண்டு  வந்தது  அதுதான்  முதல்முறை.  இதற்கு  முன்பாகவே  திலகர் , ஸ்வராஜ்யம் எனது  பிறப்புரிமை  என்று  மேடைகளில்  முழங்கிவிட்டார் .  அவர்  காலமாகி  பல  ஆண்டுகள்  கழித்து  இந்த  தீர்மானத்தை  காங்கிரஸ்  முன்  வைத்தது  அன்றுதான் .  இது  நடந்தது  சிந்து  மாகாணத்தில் , ராபி  நதி  கரையில் .  இன்று  அந்த  நதியோ , அந்த  மாகாணமோ  நம்  கையில்  இல்லை .  ராமனின்  மகன்  ஆண்ட  லவபுரி  என்னும் லாகூர் , அந்த  நதி , மேற்கு  பஞ்சாப்  நம்  கையில்  இல்லை.



‘பாகிஸ்தான்  தீர்மானம் ’ என்று  பெயர்  கூட  வைக்கபடாத , பத்திரிக்கைகளால்  மட்டுமே  வர்ணிக்கப்பட்டு  வந்த தீர்மானம்  கராச்சியில்  நிறைவேற்றப்பட்டு  இன்று  கராச்சி  அவர்கள்  கையில்  உள்ளது .  முஸ்லிம் லீக் வங்காளதேசத்தில்  உருவானது .  இந்த  இரண்டு  பிரதேசங்களும்  அவர்கள்  கையில்  உள்ளன .  இதில்  யார்  ஆண்மையோடு  நடந்து  கொண்டார்கள் , யார்  வென்றார்கள், யார் தோற்றார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

'கண்ணிரண்டும் விற்று சித்திரம் கொள்வாரை கைகொட்டி சிரியாரோ' என்று பாரதி பாடினான்.  இதே பாரதிதான் 'சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா' என்று பாடினான்.  பாடியது பாப்பாவிற்கு அல்ல  நமக்கு.  ஆனால், நடந்தது என்ன?  ஹிந்துஸ்தானம் சேதபட்டுவிட்டது.  இதை சரி செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

ஒன்றுபட்ட இந்தியா வரைபடம்
ஆங்கிலேயர்கள் காலத்தில்
சேதப்பட்ட ஹிந்துஸ்தானத்தை சரிசெய்து இதை மீண்டும் தெரிவமேன்று அனைவரும் கும்பிடும் நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய கடமை நமக்கு உள்ளது.  நாம் பல பாகபிரிவினைகளை பற்றி கேள்விபட்டிருக்கிறோம்.  நிலம், வீடு, கிணறு, பாத்திரங்கள், நகைகள் என்று அனைத்தையும் பிரித்துகொள்வார்கள்.  ஆனால் தாயை?  தாயை வெட்டி ஆளுக்கு பாதி தரமுடியுமா?  முடியும் தா என்றான் முகமத் அலி ஜின்னாஹ்.  இந்தா  எடுத்து செல் என்று தந்தார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

இப்படி செய்ததன் மூலம் இவர்கள் வந்தே மாதரம் என்று சொன்னதெல்லாம் உள்ளத்திலிருந்து வந்ததா உதட்டளவில் சொல்லபட்டதா என்று தெரியவில்லை.  எதையாவது செய்து சுதந்திரம் பெற்றால் போதும் என்று நினைத்தார்களா, இல்லை ஒரு தெளிவான திட்டத்தோடு சுதந்திர போராட்டத்தை அணுகினார்களா தெரியவில்லை.

இந்த நாட்டில் எத்தனையோ பொறுப்பற்ற மன்னர்களும், அரசாங்கங்களும் மக்களின் வாழ்கையை சீரழித்திருக்கிறார்கள்.  மக்கள் அதற்கு எதிராக வெகுண்டெழுந்து போராடி அவர்களை தூக்கி எறிந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு காணாமல் நாம் பொறுமையாகவே இருக்கிறோம் என்று சொன்னால் அது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் நமக்கு செய்திருக்கும் கொடுமைகளுக்குதான்.

இந்த புற்று நோய்க்கு நாமும் இலக்காகி நேற்றுவரை ஹிந்துவாக இருந்த அந்த முஸ்லிம் தன்னையும் இலக்காக்கிகொண்டு இறக்க கூட தயாராகிறார்கள் என்றால், இந்த கொடுமையை எங்கு சென்று சொல்ல?  ஒரு புற்று நோயை போல இந்த தேசம் எனும் உடலுக்குள் புகுந்து அறிதுகொண்டே வருகிறது.  ஹிந்துக்களும் அவர்களுடைய வன்முறை, காமம்,பேராசை, கோபத்திற்கு இரையானாலும் ஆவேனே ஒழிய இதன் தீர்வுக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக கதவை சாத்திக்கொண்டு வீட்டில் முடங்கிகிடந்தால் துக்கத்தை தவிர வேறு என்ன வரும்?

முஸ்லிம் மற்றும் அந்த நாடுகளுடைய எண்ணம் இந்த ஹிந்து இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக மதம் மாற்றி துண்டு துண்டாக வெட்டி, இந்திய என்றொரு தேசமே இல்லாத நிலையை உருவாக்கி, ஒரு மிக பெரும் இஸ்லாமிய நாடாக உருவாக்குவதே.

நண்பர்களே, நான் ஏதோ வெறி பிடித்து பேசுகிறேன் என்று எண்ணாதீர்கள்.  இது அனைத்தும் முஹம்மத் அலி ஜின்னாவின் வார்த்தைகள்.  இன்றுவரை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் வார்த்தைகளே இவை.
(நன்றி:கீர்த்திவாசன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக