ஏர்-செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்திற்கு கைமாறியது தொடர்பாக விசாரிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து அழைத்து வரப்பட்ட ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி அதிகாரிகள், சி.பி.ஐ. கோரிய ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளனர்.புதன்கிழமை அவர்கள் வாக்குமூலம் கொடுக்க வந்தபோது, அவர்களிடம் அந்த ஆவணங்கள் இருக்கவில்லை.
தமக்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலை அவர்களிடம் கொடுத்திருந்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள். தேவைப்படும் ஆவணங்களை தேடி எடுப்பதற்கு கால அவகாசம் தேவை என்று வங்கித் தரப்பு கூறியிருந்தது.
தயாநிதியின் மிரட்டலின்பேரில் ஏர் செல் நிறுவனத்தைப் பெற்றுக்கொண்ட மேக்ஸிஸ், அந்த நன்றிக் கடனுக்காக சென்னையிலுள்ள சன் டைரக்ட் நிறுவனத்துக்கு பணத்தை வழங்கியது என்பதே சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு. சன் டைரக்ட்டுக்கு வழங்கப்பட்ட பணம், அவர்களது வங்கிக் கணக்கு ஒன்றுக்கு வந்தது தொடர்பான ஆவணங்களே இவை.
ஓவர்சீஸ் பன்ட் ட்ரான்ஸ்பர் என்ற வகையில் சன் டைரக்டின் வங்கிக் கணக்குக்கு இந்தப் பணம், சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. பண ட்ரான்ஸ்பருக்கு சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்டஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பேங்கின் ஆவணங்கள், தயாநிதிக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் இணைக்கப்படவுள்ளன..
பணப்பரிமாற்றம் தொடர்பாக தேவைப்பட்ட ஆவணங்கள் கையுக்கு வந்துள்ள நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் தயாநிதி மாறனுக்கு எதிரான குற்றப்பத்திரிகை நெ்த நேரத்திலும் தாக்கல் செய்யப்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக