கல்கி போலிச் சாமியார்
''கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார், 1984-ல் என்னோடு ஆந்திர மாநிலம் குப்பத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியில் சக ஆசிரியராக இருந்தவர். போதிய வருமானம் இல்லாததால், அதை விட்டுவிட்டு, எல்.ஐ.சி. ஏஜென்ட் ஆனார். அப்போதே அவருக்குப் பண வெறி... முதலில் 'நான் சாமியின் வரம் பெற்றவன்' என்று மக்களிடம் காணிக்கையாகப் பணம் வசூலிக்கத் தொடங்கி னார். அப்புறம் 'நான், விஷ்ணுவின் 10-வது அவதாரமான கல்கி பகவான்' என்று கூற ஆரம்பித்தார். யாரும் அதை நம்பவில்லை. அப்போது இவர், ஒரு புது டெக்னிக்கைக் கையாண்டார். அதாவது, கிராமங்களில் 10-ம் வகுப்பு முடித்த 125 ஆண்கள் மற்றும் 125 பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மசியவைத்து, அனைவருக்கும் வெள்ளை உடுப்பு கொடுத்து, அக்கம் பக்கக் கிராமங்களுக்கு அனுப்பிவைத்தார். 'விஜயகுமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார்' என்று பிரசாரம் செய்யவைத்தார். மக்கள், காணிக்கை கொடுக்க முன் வந்தனர். நாளடைவில் இவரே சிலரை ரெடி பண்ணி, 'எனக்கு கேன்சர் குணம் ஆகாமல் இருந்தது... பகவான் தொட்டார், சரியாகிவிட்டது' என்று மேடைகளில் சொல்லவைத்தார்.
அதோடு, ஷில்பா ஷெட்டி, மனிஷா கொய்ராலா போன்ற நடிகைகளை, 'நான் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகுதான் பெரும் வாய்ப்புகள் வாசலுக்கு தேடி வரத் தொடங்கின' என்று லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்துப் பேசவைத்து விளம்பரம் தேடினார். இதுதான் விஜயகுமார்... கல்கி பகவான் ஆன கதை!'' என்று ஒரு முன்னோட்டம் கொடுத்தவர் தொடர்ந்தார்.
''இவர், 'நான் உலகத்தையே தீட்சை அடையச் செய்கிறேன். தீட்சைக்கு மூன்று நிலைகள் உள்ளன' என்று கூறி, முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்றாம் நிலைக்கு 21,000 ரூபாய் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிடமும் கறந்துவிடுகிறார். அதுவும் வெளிநாட்டினர் சிக்கிவிட்டால், அவர்களது மொத்தச் சொத்துகளும் அம்போதான்!
கல்கி பகவான் ஆசிரமத்தில் நடக்கும் கஞ்சா, களியாட்டங்கள்பற்றி ஏற்கெனவே உங்கள் பத்திரிகை உட்பட பல பத்திரிகைகளில் விவரமாகச் செய்திகள் வந்தன. இந்தக் களியாட்டங்களை அரங்கேற்றவே, ஒரு ஸ்பெஷல் ஸ்டூடியோவை உருவாக்கி இருக்கிறார். இதன் உள்ளே 25 வயதுக்கும் குறைவான பெண்களை மட்டும் அழைத்து ஸ்பெஷல் தீட்சை தருவார். ஆந்திர மாநில சேனலில் வெளியான அதிர்ச்சிக் காட்சிகள் மிகக் குறைவுதான். ஆசிரமத்தில் நடப்பவை முழுதாக இன்னும் வெளிவரவில்லை.
இவருக்கு 90-களில் வெறும் 43,000 ரூபாய் மட்டுமே வருட வருமானம். ஆனால், இன்று 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள்... ஆசிரமங்கள். தனது வீட்டின் நீச்சல் குளத்துக்கு ஸ்பெயினில்இருந்து டைல்ஸ் வாங்கி வந்து பதித்து இருக்கிறார். ஒரு சந்நியாசிக்கு இதெல்லாம் எதற்கு? இவரது மகன் கிருஷ்ணாவுக்கு லாஸ்ஏஞ்ஜலீஸில் கம்பெனி... 33 வெளிநாட்டு கார்கள், பெங்களூருவில் ஆயிரம் கோடியில் கட்டுமான பிசினஸ், மருமகளுக்கு 13 கம்பெனிகள்... இவை எல்லாம் எப்படி வந்தன?
மக்களுடைய நிலங்களையும், பணத்தையும் பறித்துக்கொண்டு பகவான் பெயரில் உலா வருவதால், வரிச் சலுகை பெற்று, மும்பையில் உள்ள தனது ஆட்கள் மூலமாகக் கறுப்பு பணத்தை லாஸ்ஏஞ்ஜலீஸில் இருக்கும் மகனுக்கு அனுப்பி, அதை மாற்றிவிடுகிறார். அதோடு, இவரது அந்தரங்க உண்மைகள் எல்லாம் தெரிந்த மேனேஜர்களான பவன், விகாஷ் என்ற இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். அதெல்லாம் விபத்துகள் என்று கூறி போலீஸார் கேஸை முடித்ததும் இவருடைய 'தாராளம்' காரணமாகத்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக