சனி, 20 ஆகஸ்ட், 2011

காந்திக்குப் பிறகு


முன்னாள் ராணுவ வீரரான அண்ணா ஹசாரே… மகாராஷ்டிராவை மையமாகவே கொண்டு, ஊழலுக்கு எதிராக இத்தனை நாள் போராடி வந்தார். 2010ம் ஆண்டு வரை அவர் மகாராஷ்டிரா மக்கள் மட்டுமே அறிந்தவராக இருந்தார். அல்லது அவர் வாழ்ந்த பகுதியிலும், மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளிலும் தான் தெரிந்தவராக வலம் வந்துக் கொண்டிருந்தார்.
ஆனால், இன்று… இந்தியா முழுவதும் தெரிந்த நபராக… தலைவராக மாறிவிட்டார்.
அவர் என்ன இந்திய கிரிக்கெட் அணியில் பங்கேற்றாரா?
அவர் இந்தி திரைப்படத்தில் நடித்து இந்த புகழை பெற்றாரா?
அரசியல் ரீதியாக தனக்கு இடத்தை தேடுவதற்காக, ஸ்டண்ட் அடித்து இந்த அளவுக்கு உயர்ந்தாரா?
இல்லை. இல்லை. இல்லை…
ஊழலுக்கு எதிராக புறப்பட்ட ஹீரோ. அதனால் தான் ஒரே நாளில் இந்தியா முழுவதும்
2
மக்களால் அவர் பூஜிக்கப்படுகிறார்.
ஒன்றுமில்லை. இந்தியா மட்டுமில்லை. உலகம் முழுவதும் ஒரே கான்ப்சட் தான்.
தப்பை தட்டிக் கேட்க வேண்டும்- இதுதான் மனிதனை மகாத்மாவாக்குவது.
தப்பை தட்டி கேட்கும் நபரைதான் மக்கள் விரும்புவார்கள். அந்த தப்பை யார் செய்தாலும், துணிச்சலாக, அவன் அரசனாகவே இருந்தாலும், தட்டி கேட்பவன் உண்மையிலே ஹீரோதான்.
அந்த வகையில் தான் அண்ணா ஹசாரே… ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அதுவும், அவருடைய எழுச்சி இந்தியா மட்டுமல்ல….. உலகையே வியக்க வைத்திருக்கிறது. ஒரு தலைவனாக மாறுவதற்கு எத்தனையோ வருடங்களாகலாம். ஆனால், ஒரே நாளில் ஹசாரேவை இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு காரணம், ஊழல்.
இந்தியாவில், பலரும் பல வித பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலர் கடனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலர், வேலையில்லாமல்
3
பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலர் பெற்றோர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், எல்லோரும் ஒரே அணியில் திரள காரணம், அவர்கள் எல்லாம் ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள்.
அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். பிணத்தை ஒப்படைக்கக்கூட, டாக்டர் முதல் தோட்டி வரை இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் தந்து தொலைக்க வேண்டி இருக்கிறது. பிரேத பரிசோதனை செய்யும் டாக்டருக்கு ஆயிரம் ரூபாயாம்! சுடுகாட்டில் இருக்கும் வெட்டியானுக்கும் இந்த டாக்டருக்கும் என்ன வித்தியாசம். பிணத்துடன் இருப்பதை பறிப்பவன் தான் வெட்டியான். அந்த வெட்டியான் கூட பரவாயில்லை. அந்த புனிதமான டாக்டர் தொழிலை செய்துக் கொண்டு… சொல்லவே வெட்கமாக இருக்கிறது.
அதுவும் தற்கொலை வழக்காக இருந்தால், டாக்டர் மட்டுமா பணத்தை பறிக்கிறார்கள். போலீசுக்கு பத்தாயிரம் வரை செலவு செய்து தொலைக்க வேண்டும்.
தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்று எந்த சான்றிதழையாவது காசில்லாமல் வாங்க முடியுமா? முதியோர் தொகையிலும் 25 ரூபாயை பறிக்கும் ஊழியரை என்ன செய்வது?
வருவாய்த்துறையில் பட்டா வாங்க முடியுமா? இல்லை நிலத்தை அளக்க சர்வேயர் சும்மா வருவாரா?
ரேஷன் கார்டு வாங்காதவர்கள், காசில்லாமல் வாங்கலாம் என்று நடையாய் நடந்துக்
4
கொண்டே இருந்தால், வாழ்க்கையே தேய்ந்து போய்விடுமே?
-இப்படி எங்கெங்கு காணினும் ஊழல் ஊழல் ஊழல்.
இருப்பவன், நொந்துக்கொண்டே, கொடுத்துவிட்டு போய்விடுவான். இல்லாதவன். அடுத்த வேளைக்கு நாயாய் பேயாய் ஒவ்வொரு காசுக்கும் கணக்குப் பார்த்து உழைத்துக் கொண்டிருப்பவனிடம் லஞ்சம் கேட்டால்… அவன் மனதில் இருப்பதை கேட்டால், லஞ்சம் கேட்டவன் உயிரோடு வாழவே முடியாது. கடனை வாங்கி லஞ்சம் கொடுக்க வேண்டிய அளவுக்கு, அந்த சாமன்யனை தள்ளினால்?
5
வறுமையிலும் கொடுமை புரியும் இந்த லஞ்சத்தை நாடே எதிர்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று புறப்பட்டிருக்கும் ஆதர்ஷ புருஷர் தான் அண்ணா ஹசாரே!
சுதந்திரம் அடைந்து 64 வருடங்களாகிறது. குறைந்தபட்சம் கல்வி, மருத்துவம் இதிலாவது மக்களை நிம்மதியாக இந்த அரசியல்வாதிகள் வைத்திருக்கிறார்களா?
அடிப்படை உரிமைகளுக்குக் கூட 64 ஆண்டுகளாகியும் இந்த நாட்டில் அலைந்து திரிய வேண்டி இருக்கிறது.
கோடி கோடியாய் சுவிஸ் வங்கியிலும், வெளிநாட்டு கம்பெனிகளிலும் இந்தியாவிலிருந்து முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த பணம் எல்லாம் இங்கே சுரண்டி சுரண்டி எடுக்கப்பட்டு, அங்கே முதலீடு செய்தவர்கள் யார்?
இந்தியாவில் 110 கோடி மக்கள் தொகையில், 10 லட்சம் பணக்காரர்கள் தான் இந்த முதலீடுகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்க முடியும்.
ஒரு பக்கம் கோடியில் கொழிக்கும் கூட்டம். மறுபக்கம் தெருக்கோடியில் ஒழுகும் குடிசையில், ஒரு வேளைக்கு உணவில்லாத கூட்டம்.
இந்த நிலை மாற வேண்டும் என்றால், முதலில் ஒழிக்கப்பட வேண்டியது ஊழல் தான். அப்போதுதான், பல மக்களின் வாழ்க்கையில் விடியலே பிறகும். அரசு ஊழியர்கள் வாங்கும் சக்தி படைத்தவர்கள் என்ற ஒரு அடிப்படையில், இந்த இந்தியாவை ஆளும் மத்திய அரசாங்கம் ஏமாற்றி வருகிறது.
முதலில், ஊழலை ஒழிக்க அனைத்து தரப்பு மக்களும் ஜாதி, மதம், இனம் பாராமல் அண்ணா ஹசாரேவின் கரத்தை வலுப்படுத்துங்கள்.
அதுதான் நாளைய இந்தியாவை வளரச்செய்யும்.



நன்றி
:
  தமிழ்லீடர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக