செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஜெயலலிதாவின் அதிரடி


ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார் அதை தொடர்ந்து பேசியவர், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இவ் முடிவு
எடுக்கப்படுகிறது என்று அறிவித்தார். இது உண்மையில் மிக பெரிய விடயம், ஜெயலலிதாவிடம் அந்த மூவரையும் காப்பாற்றுங்கள்  காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தவர்கள்  
கூட இதை எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க
வேண்டும் என்று கோரி ஜெயலலிதா  சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது பாராட்ட தக்க  மிகப்பெரிய விடயம் இது மிகப்பெரிய சாதனை என்பதை விட தமிழ் உணர்வாளர்களின் ஒட்டுமொத்த அபிமானத்தையும்
ஒருங்கே சம்பாதித்து விட்டார் ஜெயலலிதா. ஏனெனில் மத்தியஅரசு ஆதரவுடன் ஜனாதிபதியால் உறுதிப்படுத்தபட்ட மரணதண்டனையை ஒரு மாநில முதல்வர் குறைப்பதோ நிறுத்தி வைப்பதோ மிக சிக்கலானது.
அதைவிட அவர்கள் மீது சாட்டபட்டுள்ள குற்றம் சாதாரணமானது
அல்ல ஒரு Exபிரதமரை  அவர் நாட்டில் வைத்தே கொலை செய்த குற்றம்.
இது ஒரு தவறான  குற்றசாட்டு  அவர்கள் நிரபராதி என்பது உண்மையாக
இருக்கும் பட்சத்திலும் பல விசாரணைகள் நடத்தப்பட்டு நீதிவான்களால்
தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், பின்பு  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்  மறு ஆய்வு மனு தாக்கல் செய்தாபோதும். இதனையும் அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது,  பின்  தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள் ஆனால்  தமிழக ஆளுநரும்   இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்தார். அதன் பின்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் 
ஆகிய  மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை   இந்தியக் குடியரசுத் தலைவரும் நிராகரித்த நிலையில்   அதன் பின்பு ஒரு மாநில முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிடுவது என்பது எத்தகைய சிக்கல்களை உருவாக்கும்  என்பது நாம் அறியாதது அல்ல.
இந்த  உண்மையைத்தான் முந்தைய ஜெயலலிவாவின்  தன்னால் எதுவும்
செய்யமுடியாது என்ற அறிக்கை சொல்லிப்போனது. இந்நிலையில்
தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜெயலலிதாவால்
சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட இந்த  தீர்மானமானது ஜெயலலிதாவின்  அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல் கல்,  மீண்டும்
ஒருமுறை மனிதாபிமானத்துடன் தன் துணிச்சலை நிரூபித்து உள்ள ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன்  தாயார்,  சீமான்,  வைகோ போன்றவர்களும்  பல தமிழ் உணர்வாளர்களும் தெரிவிக்கும் பாராட்டுகளுடனும் என் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் இந்த நேரத்தில் கருணாநிதி பற்றி பேசுவது தேவையற்றதுதான். ஆனாலும் இந்த உத்தமபுத்திரன் போல் வேஷம் போடும் கருணாநிதியின் உண்மை முகத்தின்  சில  பகுதிகளையேனும்  காட்டியே  ஆக வேண்டும்.


புள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது கருணாநிதிக்கு
ஒன்றும் புதுசு இல்லைத்தான். ஆனால் இந்த மூவர் மரணதண்டனை
விடயத்தில் தன் கபட நாடகத்தை அரங்கேற்றுவதுதான்  மன்னிக்க முடியாதபடி உள்ளது.  நில அபகரிப்பின் நியாயமான நடவடிக்கையில்
திமுகாவின் முக்கிய புள்ளிகளே உள்ளே போக வெகுண்டெழுந்த
கருணாநிதி மிக பெரிய பேரணி நடத்தி தன் எதிர்ப்பை காட்டுகிறார்
அதே வேகத்தை ஏன் இந்த மூவருக்காகவும் காட்டி இருக்க கூடாது.
சரி பேரணிதான் நடத்த வேண்டாம் "அவர்களை காப்பாற்றுங்கள்"
என்ற அறிக்கைதான் விட்டார் அத்துடன் அமைதியாக இருந்து இருக்க வேண்டியதுதானே.. இதிலுமா..  ஜெயாவை சாடி உன் கீழ்த்தரமான
அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும். இந்த வயது போன நேரத்தில்
கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா...?? இந்த மூவரின் தூக்கு தண்டனை
யாரால் உறுதி செய்யப்பட்டது என்ற மனச்சாட்சி கூடவா உறுத்தவில்லை.
அப்பாக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு, அப்பா நடிகன் என்றால்
மகன் மகா நடிகனாக அல்லவா இருக்கான், ஜெயலலிதாவின்  தமிழர் மேலான போலிப்பாசம் வெளுத்துவிட்டதாம், சொல்லுறாரு ஸ்டாலின்.
சோனியாவின் புடைவை தலைப்பின் பின்னால் நிக்கும் இவர்கள்
அதை சொல்லுகிறார்களாம். ஏன்ய்யா.... மூன்று உயிர்களில் பதைபதைப்பில்
நின்றுகொண்டு அங்கயும் உங்களுக்கு ஆதாயம் தேடி அறிக்கைவிட
உடம்பு கூசாவில்லையா??  உண்மையில் அக்கறை உள்ளவர்கள்தான் என்றால் கடந்த ஆட்சி உங்கள் கையில் தானே இருந்தது. சொத்து
சேகரிப்பதில் காட்டிய ஆர்வத்தை அவர்களின் கருணை மனுக்களிலும்
காட்டி இருக்கலாம் இல்லையா...?? பேசாமால் இருந்தாக் கூட பராவாயில்லை அவர்களின் மரண தண்டனைக்கு ஆதரவு வழங்கி
சோனியாவை குஷி படுத்திவிட்டு இப்போது ஏன் இந்த போலி வேஷம்.
புள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் இந்த நரிப்புத்தி எதற்கு.
தமிழர்கள் முன்னால் அம்மணமான பின்னுமா உங்கள் வேஷம் இன்னும் கலையவில்லை என்று நம்புகிறீர்கள்..??

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின்  மரணதண்டனைக்கு  ஆதரவு  அளித்த அவர்களின் கருணை மனுவை நிராகரிக்கலாம் என்று
 19.4.2000 அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

"தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது."

"கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது."

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்

 ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை தமிழக மக்களை புண்படுத்துவதாக உள்ளது. எனவேதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது.

சனி, 27 ஆகஸ்ட், 2011

ராஜீவ் கொலை வழக்கு மர்மம்


ராஜீவ் காந்தி படுகொலை புதிய குற்றவாளிகளை அடையாளம் காட்டுகிறார் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ்.
இவர் அளித்த பேட்டி இங்கே தரப்படுகிறது. இந்தக் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் காங்கிரஸ்காரரே என்கிறார். சுவாரஸ்யமான இந்தப் பேட்டி இங்கேhttp://www.youtube.com/watch?v=7YYfXWxe_1A&feature=player_embedded

சனி, 20 ஆகஸ்ட், 2011

காந்திக்குப் பிறகு


முன்னாள் ராணுவ வீரரான அண்ணா ஹசாரே… மகாராஷ்டிராவை மையமாகவே கொண்டு, ஊழலுக்கு எதிராக இத்தனை நாள் போராடி வந்தார். 2010ம் ஆண்டு வரை அவர் மகாராஷ்டிரா மக்கள் மட்டுமே அறிந்தவராக இருந்தார். அல்லது அவர் வாழ்ந்த பகுதியிலும், மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளிலும் தான் தெரிந்தவராக வலம் வந்துக் கொண்டிருந்தார்.
ஆனால், இன்று… இந்தியா முழுவதும் தெரிந்த நபராக… தலைவராக மாறிவிட்டார்.
அவர் என்ன இந்திய கிரிக்கெட் அணியில் பங்கேற்றாரா?
அவர் இந்தி திரைப்படத்தில் நடித்து இந்த புகழை பெற்றாரா?
அரசியல் ரீதியாக தனக்கு இடத்தை தேடுவதற்காக, ஸ்டண்ட் அடித்து இந்த அளவுக்கு உயர்ந்தாரா?
இல்லை. இல்லை. இல்லை…
ஊழலுக்கு எதிராக புறப்பட்ட ஹீரோ. அதனால் தான் ஒரே நாளில் இந்தியா முழுவதும்
2
மக்களால் அவர் பூஜிக்கப்படுகிறார்.
ஒன்றுமில்லை. இந்தியா மட்டுமில்லை. உலகம் முழுவதும் ஒரே கான்ப்சட் தான்.
தப்பை தட்டிக் கேட்க வேண்டும்- இதுதான் மனிதனை மகாத்மாவாக்குவது.
தப்பை தட்டி கேட்கும் நபரைதான் மக்கள் விரும்புவார்கள். அந்த தப்பை யார் செய்தாலும், துணிச்சலாக, அவன் அரசனாகவே இருந்தாலும், தட்டி கேட்பவன் உண்மையிலே ஹீரோதான்.
அந்த வகையில் தான் அண்ணா ஹசாரே… ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அதுவும், அவருடைய எழுச்சி இந்தியா மட்டுமல்ல….. உலகையே வியக்க வைத்திருக்கிறது. ஒரு தலைவனாக மாறுவதற்கு எத்தனையோ வருடங்களாகலாம். ஆனால், ஒரே நாளில் ஹசாரேவை இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு காரணம், ஊழல்.
இந்தியாவில், பலரும் பல வித பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலர் கடனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலர், வேலையில்லாமல்
3
பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலர் பெற்றோர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், எல்லோரும் ஒரே அணியில் திரள காரணம், அவர்கள் எல்லாம் ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள்.
அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். பிணத்தை ஒப்படைக்கக்கூட, டாக்டர் முதல் தோட்டி வரை இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் தந்து தொலைக்க வேண்டி இருக்கிறது. பிரேத பரிசோதனை செய்யும் டாக்டருக்கு ஆயிரம் ரூபாயாம்! சுடுகாட்டில் இருக்கும் வெட்டியானுக்கும் இந்த டாக்டருக்கும் என்ன வித்தியாசம். பிணத்துடன் இருப்பதை பறிப்பவன் தான் வெட்டியான். அந்த வெட்டியான் கூட பரவாயில்லை. அந்த புனிதமான டாக்டர் தொழிலை செய்துக் கொண்டு… சொல்லவே வெட்கமாக இருக்கிறது.
அதுவும் தற்கொலை வழக்காக இருந்தால், டாக்டர் மட்டுமா பணத்தை பறிக்கிறார்கள். போலீசுக்கு பத்தாயிரம் வரை செலவு செய்து தொலைக்க வேண்டும்.
தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்று எந்த சான்றிதழையாவது காசில்லாமல் வாங்க முடியுமா? முதியோர் தொகையிலும் 25 ரூபாயை பறிக்கும் ஊழியரை என்ன செய்வது?
வருவாய்த்துறையில் பட்டா வாங்க முடியுமா? இல்லை நிலத்தை அளக்க சர்வேயர் சும்மா வருவாரா?
ரேஷன் கார்டு வாங்காதவர்கள், காசில்லாமல் வாங்கலாம் என்று நடையாய் நடந்துக்
4
கொண்டே இருந்தால், வாழ்க்கையே தேய்ந்து போய்விடுமே?
-இப்படி எங்கெங்கு காணினும் ஊழல் ஊழல் ஊழல்.
இருப்பவன், நொந்துக்கொண்டே, கொடுத்துவிட்டு போய்விடுவான். இல்லாதவன். அடுத்த வேளைக்கு நாயாய் பேயாய் ஒவ்வொரு காசுக்கும் கணக்குப் பார்த்து உழைத்துக் கொண்டிருப்பவனிடம் லஞ்சம் கேட்டால்… அவன் மனதில் இருப்பதை கேட்டால், லஞ்சம் கேட்டவன் உயிரோடு வாழவே முடியாது. கடனை வாங்கி லஞ்சம் கொடுக்க வேண்டிய அளவுக்கு, அந்த சாமன்யனை தள்ளினால்?
5
வறுமையிலும் கொடுமை புரியும் இந்த லஞ்சத்தை நாடே எதிர்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று புறப்பட்டிருக்கும் ஆதர்ஷ புருஷர் தான் அண்ணா ஹசாரே!
சுதந்திரம் அடைந்து 64 வருடங்களாகிறது. குறைந்தபட்சம் கல்வி, மருத்துவம் இதிலாவது மக்களை நிம்மதியாக இந்த அரசியல்வாதிகள் வைத்திருக்கிறார்களா?
அடிப்படை உரிமைகளுக்குக் கூட 64 ஆண்டுகளாகியும் இந்த நாட்டில் அலைந்து திரிய வேண்டி இருக்கிறது.
கோடி கோடியாய் சுவிஸ் வங்கியிலும், வெளிநாட்டு கம்பெனிகளிலும் இந்தியாவிலிருந்து முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த பணம் எல்லாம் இங்கே சுரண்டி சுரண்டி எடுக்கப்பட்டு, அங்கே முதலீடு செய்தவர்கள் யார்?
இந்தியாவில் 110 கோடி மக்கள் தொகையில், 10 லட்சம் பணக்காரர்கள் தான் இந்த முதலீடுகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்க முடியும்.
ஒரு பக்கம் கோடியில் கொழிக்கும் கூட்டம். மறுபக்கம் தெருக்கோடியில் ஒழுகும் குடிசையில், ஒரு வேளைக்கு உணவில்லாத கூட்டம்.
இந்த நிலை மாற வேண்டும் என்றால், முதலில் ஒழிக்கப்பட வேண்டியது ஊழல் தான். அப்போதுதான், பல மக்களின் வாழ்க்கையில் விடியலே பிறகும். அரசு ஊழியர்கள் வாங்கும் சக்தி படைத்தவர்கள் என்ற ஒரு அடிப்படையில், இந்த இந்தியாவை ஆளும் மத்திய அரசாங்கம் ஏமாற்றி வருகிறது.
முதலில், ஊழலை ஒழிக்க அனைத்து தரப்பு மக்களும் ஜாதி, மதம், இனம் பாராமல் அண்ணா ஹசாரேவின் கரத்தை வலுப்படுத்துங்கள்.
அதுதான் நாளைய இந்தியாவை வளரச்செய்யும்.



நன்றி
:
  தமிழ்லீடர்

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி கருணாநிதி மறைக்கும் இரண்டு பூசணி


கோபாலபுரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்கும் சமரச சமாதான படலம் நடத்தவே நேரம் சரியாக இருக்கும் கருணாநிதிக்கு... பற்றாக்குறைக்கு நில அபகரிப்பு கைதுகள்., குண்டர் கைதுகள், பொதுக்கூட்டங்கள் என கழக அரசியல் நடத்தவும் இடையில் நேரம் இருக்கிறது.
இதற்கும் இடையே,  கள்ளகவிதை எழுதவும் கருணாநிதிக்கும் நேரம் இருக்கிறது என்பதை அவ்வப்போது முரசொலி நிரூபித்துவருகிறது.
ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை முரசொலியில்... விரைவில் நாள் குறிக்கப்படும்என்ற வீராப்புத் தலைப்புடன் மு.க. ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
அந்த கவிதை இதுதான்...
‘‘கற்கண்டுத் தமிழ்க் கவிதைகள் கசக்குதென
அவற்றின் மீது கரிபூசி மறைக்கும்
கர்த்தப அறிவுடையோர்க்கு சம்மட்டி அடி
கொடுத்தது போல் வந்தது தீர்ப்பு!
தமிழர்களின் தொடர்ந்துவரும் தூய
வரலாற்றை
தடுத்து நிறுத்தலாம் என்ற
தீய எண்ணத்தோடு
பக்கங்களைக் கிழிக்கும் பாவிகளே!
பளார் பளார் என உங்கள்
கன்னங்களில் அறைவதுபோல்
வந்துள்ள நெருப்புத் தீர்ப்பை
பஞ்சுப் பொதிகளால் அணைக்கலாம்
என்று
பகற்கனவு காணாதீர்...’’ --
என்று
தொடரும் இந்த மு.க. கவிதை....
‘‘இன்று எமக்கு கிடைத்த வெற்றி....
மறைக்கப் பார்க்கும் திறமையினால்
அழிவதில்லை...
இளையை தலைமுறையினர் எக்காள
முழக்கமிடுமோம்
எல்லாரும் வாருங்கள் என்று அழைக்கின்ற
தன்மான அணிக்கு தவறாமல் வந்திடுவீர்...
விரைவில் நாள் குறிக்கப்படும்
விரிவுரையாற்றுவோர் பெயர்களும்
அறிவிக்கப்படும்....’’
என்று தன் எழுத்தால் எக்காள ஏலமிட்டிருக்கிறார் கருணாநிதி.
இந்த கவிதை வரிகளில் இரண்டு வரலாற்றுப் பொய்களை வசதியாக எழுதி முழு பூசணிக்காயை தன் மொழியில் மறைத்திருக்கிறார் கருணாநிதி.
மறைக்கப்பட்ட பூசணி 1 :
‘‘தீய எண்ணத்தோடு பக்கங்களைக்
கிழிக்கும் பாவிகளே...
பளார் பளார் என உங்கள்
கன்னங்களில் அறைவதுபோல
வந்த நெருப்புத் தீர்ப்பு.....’’
என்பது கருணாநிதி எழுதிய முதல் பொய்!
தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் உள்ள கருணாநிதி, கனிமொழி ஆகியோரின் சுயபுராணத்தைக் கண்டித்ததோடு அவற்றை நீக்குவதற்கும் புதிய் அரசுக்கு தடை இல்லை என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம். அதாவது இந்த விஷயத்தில் கருணாநிதியின் கன்னத்தில்தான் பளார் பளார் என அறைந்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், தீபக் மிஸ்ரா, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அளித்துள்ள அந்தத் தீர்ப்பில் கருணாநிதியின் இடைச் செருகல்கள் பற்றி குறிப்பிடும்போது...
‘‘சமச்சீர் கல்வி தொடர்பான பாடப் புத்தகங்களில் முந்தைய ஆளுங்கட்சித் தலைவர் (கருணாநிதி) பற்றிய தனிநபர் துதி இடம் பெற்றுள்ளது. தற்புகழ்ச்சி மற்றும் சுயவிளம்பரமும் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கின்றன.  முந்தைய ஆளுங்கட்சியின் கொள்கை, கோட்பாடுகளும் பாடப்புத்தகங்களில் திணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொடக்கப் பள்ளி கூட மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் இவை திணிக்கப்பட்டுள்ளதால்... குறிப்பிட்ட கட்சி பற்றிய பிரசாரமும் பிஞ்சு நெஞ்சங்களில் பதியவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் நற்கல்விக்கு எந்த வகையிலும தொடர்பில்லாதவற்றை நீக்கிவிடவேண்டும். இந்தத் திருத்தங்களை செய்வதற்கு புதிய அரசுக்கு எந்தத் தடையும் இல்லை...’’
என்று தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இப்போது சொல்லுங்கள்... இது கருணாநிதிக்கு விழுந்த பளார் அறையா? ஜெயலலிதாவுக்கு விழுந்த அறையா?
தன் மேல் விழும் ஒவ்வொரு அடிகளால் வலிக்கும்போது அழுகையை வெளிக்காட்டாமல் முக சேஷ்டைகள் பண்ணும் வடிவேலு கூட இந்த கவிதைக் காமெடிக் கருணாநிதியிடம் தோற்றார் போங்கள்!
தலைவரே உச்சநீதிமன்றம் உங்க கன்னத்துலயும் பழுக்க ரெண்டு பளார் கொடுத்திருக்காங்கஎன்று அவருக்கு அருகே இருக்கும் ஆற்காடுகளும், காட்பாடிகளும் கருணாநிதிக்கு புத்தி சொன்னால் நல்லது!
கருணாநிதி மறைத்த பூசணி 2 :
கருணாநிதி தனது கவிதையில் குறிப்பிடும் இரண்டாவது பொய்... சமச்சீர் கல்வி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்றும் அதற்காக எக்காள முழக்கமிட தமிழ்நாடு எங்கும் விரிவுரைப் பொதுக்கூட்டங்கள் நடத்த நாள் குறிக்கபப்டும் என்றும் சொல்லியிருப்பதே!
ஊரான் ஊட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிப் போனானாம்
என்ற கிராமத்துப் பழமொழிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தில்தான் சமச்சீர் கல்வியைப் பற்றி யோசித்த கருணாநிதி அதற்காக கம்யூனிஸ்டுகள் கொடுத்த அழுத்ததின் பேரில் முத்துக்குமரன் கமிட்டியை அறிவித்தார்.
அதன் பேரில் முத்துக்குமரன் கமிட்டி ஆராய்ந்து பொதுப் பாடத்திட்டம் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அம்சங்கள் கொண்ட சமச்சீர் கல்வி முறையை பரிந்துரை செய்தார்.
ஆனால் கருணாநிதி அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் பொதுப் பாடத் திட்டம் என்ற ஒற்றை அம்சத்தையும் மட்டும் முன்னிறுத்தி சமச்சீர் கல்வியை கொண்டுவந்தார். இதை முத்துக்குமரனே சில பத்திரிகைகளில் குறை கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி அதைப் பொருட்படுத்தாமல்... தனது சுய தம்பட்டங்களை பாடப் புத்தகங்களில் அச்சிட்டு முடித்துவிட்டார்.
எனவே இது சமச்சீர் கல்வி அல்ல... சமரசக் கல்வி என்று டாக்டர் ராமதாஸ் கூட குறிப்பிட்டார்.
இத்தகையை சமச்சீர் கல்வியைத்தான் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அ.தி.மு.க. அரசு அறிவித்ததும் கருணாநிதி வெறும் கண்டனம் மட்டும் தெரிவித்தார். இந்த குறைந்த பட்ச சமச்சீர் கல்வியையாவது தமிழகத்தில் அமல்படுத்திடவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அபிமானியான கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும், மேலும் சில பெற்றோர்களும் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடினார்கள்.
அவர்கள் டெல்லி சென்று தங்கியது, வக்கீல் வைத்தது, சட்ட பாயின்டுகளை எடுத்துக் கொடுத்தது என எதிலாவது தி.மு.க. உதவி செய்ததுண்டா?
கனிமொழிக்காக ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கும் ராம்ஜெத்மலானியை புக் செய்த தி.மு.க.... சமச்சீர் கல்விக்காக ஒரு வண்டுமுருகன் வக்கீலையாவது அனுப்பியதா? கப்பல் முதலாளிகளையும், மத்திய அமைச்சர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள தி.மு.க. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல்களுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்திருக்குமா?
கொரடாச்சேரியில் ஆர்பாட்டம் நடத்தி ஒரு மாணவனின் உயிரை அநியாயமாக பலிகொடுத்ததுதான் தி.மு.க. சமச்சீர் கல்விக்கான சட்டப்போராட்டத்தில் செய்த ஒரே தொண்டு!
உண்மைகள் இப்படி இருக்கையில்... பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றியை தனது வெற்றியாக உருமாற்றி திசைமாற்றி திரித்துக் கொள்ள முற்படுகிறார் கருணாநிதி?
சமச்சீர் கல்வி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் பளார் வாங்கியும்... ஏதோ தாங்கள்தான் போராட்டம் நடத்தி வெற்றிகண்டோம் என எக்காள முழக்கமிட தி.மு.க.வுக்கு என்ன அருகதை இருக்கிறது?
இதை இந்த விஷயத்தில் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் கூட்டம் போட்டு பேசவேண்டும். கருணாநிதி பேசக் கூடாது!


நன்றி ;  தமிழ்லீடர்

புதன், 10 ஆகஸ்ட், 2011

அனிதாராதாகிருஷ்ணன்கைது


திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார்.
 
திருச்செந்தூரில் இருந்த அவரை போலீசார் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து  தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சமச்சீர் கல்வி உச்சநீதிமன்றம் உத்தரவு

              பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் முதல் கட்டமாக 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறிய தமிழக அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் அறிமுகப்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தது. இதுதொடர்பாக சட்டசபையில் சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திருத்தத்திற்கு தடை விதித்தது. மேலும் நடப்பாண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறும் அது உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளில் அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கிதலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர வேண்டும் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி்மன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பு, பெற்றோர்கள் தரப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தரப்பு என முத்தரப்பில் வாதங்கள் நடந்தன. கடந்த வியாழக்கிழமையன்று வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜே.எம்.பன்சால், தீபக் வர்மா மற்றும் செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி:

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை கோர்ட் ஏற்கிறது. மொத்தம் 25 காரணங்களை ஆராய்ந்து இந்த கோரிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம்.

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

சமச்சீர்கல்வித் திட்டத்தை இன்னும் 10 நாட்களில் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வி அமலாகிறது

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது. நடப்பாண்டிலேயே 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்றே சட்டசபையில் தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

3 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு

3 பேர் அடங்கிய பெஞ்ச் என்பதால் இருவிதமான தீர்ப்பு வெளியாகலாமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும் மூன்று நீதிபதிகளும் ஒரே மனதாக, ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளதால் இந்த வழக்கில் மேலும் இழுபறி தவிர்க்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

சமச்சீர் கல்வியே தொடரும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் வரவேற்றுள்ளனர் பலஇடங்களில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.

மெட்ரிகுலேஷனுக்கு மூடு விழா

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்ற நான்கு வகை கல்வி முறைகள் தமிழகத்தில் ரத்தாகிறது.

மாறாக அனைத்து பள்ளிகளும் ஒரே மாதிரியான பாடத்தையே சொல்லித்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

குரங்கணி ஸ்ரீமுத்துமாலை அம்மன்


 குரங்கணி ஸ்ரீமுத்துமாலை அம்மன்




                  எங்கள் ஊர் அம்மன் கோவில்


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அழகிய கிராமம் குரங்கணி. இத்தலத்தில்தான் முத்து மாலையம்மன் அருளாட்சி செய்கிறாள். ராவணனுடன் போர் புரிய வானரச் சேனைகள் அணிவகுத்து நின்ற இடமாதலால், இத்தலம் குரங்கணி என்றானது என்கிறார்கள். ராவணன் தன்னைக் கவர்ந்து சென்றபோது, ராமபிரானுக்கு அடையாளம் காட்ட தன் ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து வீசினாள் சீதை.
அவற்றில் ஒன்றான முத்துமாலை தாமிரபரணிக்கரையில் விழுந்து ஜோதிப் பிழம்பாய் காட்சியளித்தது. அந்த ஒளி, பார்ப்பவரின் கண்களைக் கூச வைத்தது. அப்போது அங்கு வந்த பனையடியான் என்பவர் முத்து மாலையைக் கண்டார். ஒரு மண் தாழியை எடுத்து மாலையை மூடினார். அந்த மாலை அம்மன் ரூபத்தில் அருள் சுரந்தாள்.
ஒருமுறை, தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது தாழியோடு இந்த முத்துமாலையும் மூழ்கியது. அப்போது இப்பகுதியில் வாழ்ந்த நான்கு சகோதரர்களின் கனவில் அம்மன் தோன்றினாள். எனக்கு இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டுங்கள். வேண்டும் வரங்களை அருள்வேன்என்றாள். அதன்படி கோயில் எழும்பியது.
இங்கு கருணை வடிவாக அருள் புரிகிறாள் குரங்கணி அம்மன். இடது புறம் நாராயணர், ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார். முத்துமாலை அம்மனுக்கு தென்புறம் பெரிய சுவாமி சந்நிதி உள்ளது. முப்பிடாதி அம்மன், சப்தகன்னிகைகள், பார்வதி அம்மன், உஜ்ஜயினி மாகாளி, பேச்சியம்மன், பிரம்மசக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன் மற்றும் பைரவர், வீரபத்திரர் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
விநாயகர், விஸ்வநாதர் விசாலாட்சிக்கு ஒரு சந்நிதி, நவக்கிரஹ சந்நிதி, துர்க்கை அம்மன், பனையடியான் பீடம் மற்றும் பரிவார தேவதைகளும் உள்ளனர். தை மாதம் திருமால் பூஜை நடக்கும் அன்று மதியம் கோயிலில் விழுந்து கும்பிடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.




அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிடும் அன்று அம்மன் கோவில் கோட்டைக்குள் பக்தர்கள் பொங்கலிட்டு, அன்னைக்குப் படைத்த வாழைக் குலைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.