சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டும் கட்டடங்களை விட்டும் வெளியேறினர்.
இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்டபல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.
அரசு அலுவலகங்கள் நிரம்பியுள்ள சேப்பாக்கம் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அரசு ஊழியர்கள் பயந்து வெளியேறினர். சில விநாடிகளுக்கு கட்டடங்கள் கிடுகிடுவென ஆடியதால் அவர்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் ஆடியதால் மேசை, சேர்களும் ஆடியுள்ளன. மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் ஆடியதால் அனைவரும் பீதியடைந்தனர்.
யாரோ பிடித்து உலுக்கியது போல கட்டடங்கள் வேகமாக ஆடியதால் ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.அனைவரும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதேபோன்ற நிலநடுக்கத்தையும், ஆட்டத்தையும் நகரின் பல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர். சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் நகர் முழுவதும் பெரும் பீதி காணப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்கள், அலுவலகங்களை விட்டும் வெளியேறியுள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், கோடியக்கரை உள்பட ல இங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நந்தனம் 8 மாடி கட்டடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்….நந்தனம் பகுதியில் உள்ள சேவை வரி விதிப்பு அலுவலகம் அமைந்துள்ள 8 மாடி கட்டடம் குலுங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக