ஞாயிறு, 26 ஜூலை, 2015

                                                திரிபுரசுந்தரி என்றால் என்ன?


"திரிபுரம்' என்றால் "மூன்று உலகங்கள்'. தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் என்பவை அவை. "சுந்தரி' என்றால் "அழகி'. மூன்று உலகங்களிலும் சிறப்பான அழகியாக உள்ள பார்வதிதேவி என்பதே இதன் பொருள். அவளை ராஜராஜேஸ்வரி என்றும் அழைப்பர். இதற்கு "உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் அதிகாரம் உள்ளவள்' என்று பொருள். அவளை "விசாலாட்சி' என்றும், "உலகாம்பிகை' என்றும் அழைப்பர். இதனால் தான். "பரந்து விரிந்த உலகை சொந்தமாகக் கொண்டவள்' என்று இதற்குப் பொருள்
                                                      எலுமிச்சை மகிமை



வீடானாலும், கோவில் என்றாலும் அங்கே எலுமிச்சையின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதற்கு காரணம் அந்த பழத்தில் உள்ள அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களே. வீட்டில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எலுமிச்சை உடல் நலத்தை பாதுகாக்கிறது. கோவில்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சப்பழ மாலையும், எலுமிச்சை விளக்கும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளனர். எலுமிச்சை கனிகள் மருத்துவ குணம் கொண்டவை
.                                                            இரக்கம்.......................
அரக்கர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் இருப்பிடம் எது என்றெல்லாம் தேட வேண்டாம். இரக்கம் இல்லாத நெஞ்சினர் அரக்கர் என்கிறார் கம்பர். இங்கு என்பதற்கு எதிர்ப்பதம் அங்கு என்பது போல, இரக்கம் என்பதற்கு எதிர்ப்பதம் அரக்கம். ஒருமுறை மன்னர் விக்ரமாதித்தர், காட்டுப் பகுதியில் குதிரையில் சென்று கொண்டிருந்தார். சற்று துõரத்தில் பசு ஒன்று பெரும் சேற்றில் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதை.... வெளியே கொண்டு வர, மன்னர் கடுமையாக முயற்சித்தார். முயற்சி வீணானது. பொழுது சாயும் நேரம்.... மன்னர் திகைத்த வேளையில்.... உறுமல் சத்தம் கேட்டது. பசுவை எப்படி காப்பாற்றுவது என்று சிந்தித்த நேரத்தில், மன்னர் திரும்பிப் பார்த்தார். அங்கே..... ஒரு சிங்கம் பசுவின் மீது பாயத் தயாராக இருந்தது. அதைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் மன்னருக்கு உண்டானது. வாளை உருவிக் கொண்டு, சிங்கத்தை எதிர்கொள்ளத் தீர்மானித்தார். அவ்வப்போது சிங்கம் பசுவை நோக்கிப் பாய்வதும், அதை மன்னர் தடுப்பதுமாக இரவுப்பொழுது போய்க் கொண்டிருந்தது.
அப்போது..... அங்கிருந்த மரத்தில் இருந்த ஒரு கிளி விக்ரமாதித்தரிடம், மன்னா! ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்? சேற்றில் அகப்பட்ட பசு, எப்படியும் இறக்கத் தான் போகிறது. நீ களைத்து இருக்கும் போது, சிங்கம் உன் மீது பாய்ந்து உன்னைக் கொன்று விட்டால், என்ன செய்வாய்? ஆகையால், பசுவைக் காப்பாற்றுவதை விடு! நீ பாதுகாப்பாக இரு! உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்! என்றது. மன்னர் மறுத்தார். கிளியே! நீ எனக்கு அதர்மமான வழியைக் காட்டாதே. எல்லா ஜீவராசிகளும் தான், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றன. ஆனால், அடுத்தவரைக் காப்பதற்காக, எவனொருவன் தன் உயிரைக் கொடுக்கிறானோ அவனே புண்ணியத்தை சம்பாதிக்கிறான். தலைவன் இல்லாத படை, எப்படி பயனில்லாமல் போகுமோ, அது போல இரக்கம் இல்லாத புண்ணிய செயலும் வீண் தான் என்றார். அதே விநாடியில்.... பொழுது விடிந்தது. பசு, சிங்கம், கிளி மூன்றையும் காணோம். அங்கே இந்திரன், தர்ம தேவதை, பூமாதேவி ஆகியோர் இருந்தார்கள். விக்ரமாதித்தா! உன் இரக்கம் கண்டு மகிழ்ந்தோம், என்று வாழ்த்தி, காமதேனுப் பசுவை பரிசாக அளித்து மறைந்தார்கள். இரக்கமே இன்பத்திற்கான திறவுகோல்.....!
திருநீறு சொல்லும் தத்துவம்



நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும். ஆனால், நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும்? அது சாம்பலாகவே இருக்கும். எந்த மாற்றமும் அடையாது.
இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறோம். மாற்றங்களைக் கடந்தவர் கடவுள். பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்கள் சொல்கின்றன. கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும்.
கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்து விடும். பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசுகிறோம்.
விபூதி தரிக்கும் முறை:
காலை மாலைகளில் குளித்தவுடனும், பூஜைக்கு முன்னும், ஆலய வழிபாட்டிற்கு முன்னும், உணவு உண்பதற்கு முன்னும், விபூதி அணிதல் வேண்டும்.
வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக நின்று, பூமியில் விபூதி சிந்தாமல், மூன்று விரல்களால் எடுத்து, அண்ணாந்து "சிவ சிவ'' எனக் கூறித் திருநீற்றுப்பதிகம் பாடி சிவனைத் தியானித்து நெற்றியில் அணிய வேண்டும்.
                                                            சிவலிங்கம்


சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் பாணம் இருக்கும். இதுவே சிவபாகமாகும். சிவன் நெருப்பு வடிவானவர். நெருப்பு எந்த நிலையிலும் மேல்நோக்கியே எரியும். நடுபாகமான ஆவுடையார் விஷ்ணு பாகம். விஷ்ணு தண்ணீருக்கு அதிபதி. பாணத்தில் அபிஷேகம் செய்யும் நீரை விஷ்ணு தாங்குகிறார். லிங்கத்தின் அடிப்பாகத்தை "பிரம்ம பகுதி' என்பர். பிரம்மா பூமிக்கு அதிபதி. எனவே அடிபாகம் பூமியில் புதைத்து வைக்கப்படுகிறது. ஆக, லிங்கத்தை வழிபட்டால் முப்பெரும் தெய்வங்களையும் வணங்கியதாக அர்த்தமாகிறது.
                                                          சிவன் 108 போற்றி


சிவாலயங்களில் சுவாமி பவனி வரும் போது, பக்தர்கள் இந்த 108 போற்றியை பாடியபடி வலம் வரலாம். திங்கள்கிழமைகளில் காலை, மாலையில் விளக்கேற்றியதும் வீட்டில் வைத்தும் ஒருவர் சொல்ல, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் தொடர்ந்து சொல்லலாம். பத்து நிமிட நேரமே ஆகும்.
1.ஓம் அகிலேஸ்வரா போற்றி
2.ஓம் அகிலாண்டீஸ்வரா போற்றி
3.ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
4.ஓம் அம்பிகேஸ்வரா போற்றி
5.ஓம் அமுதீஸ்வரா போற்றி
6.ஓம் அமரேஸ்வரா போற்றி
7.ஓம் அனாதீஸ்வரா போற்றி
8.ஓம் அருணாசலேஸ்வரா போற்றி
9.ஓம் அத்தீஸ்வரா போற்றி
10.ஓம் அந்தகேஸ்வரா போற்றி
11.ஓம் அசரேஸ்வரா போற்றி
12.ஓம் ஆதீஸ்வரா போற்றி
13.ஓம் ஆனந்தீஸ்வரா போற்றி
14.ஓம் அவர்த்தேஸ்வரா போற்றி
15.ஓம் ஏகாம்பரேஸ்வரா போற்றி
16.ஓம் ஓங்காரேஸ்வரா போற்றி
17.ஓம் கடம்பேஸ்வரா போற்றி
18.ஓம் கங்கேஸ்வரா போற்றி
19.ஓம் கபாலீஸ்வரா போற்றி
20.ஓம் கார்த்தமேஸ்வரா போற்றி
21.ஓம் காரணீஸ்வரா போற்றி
22.ஓம் காளத்தீஸ்வரா போற்றி
23.ஓம் காமேஸ்வரா போற்றி
24.ஓம் கும்பேஸ்வரா போற்றி
25.ஓம் குற்றாலீஸ்வரா போற்றி
26.ஓம் குஸ்மேஸ்வரா போற்றி
27.ஓம் குமாரேஸ்வரா போற்றி
28.ஓம் குஞ்சேஸ்வரா போற்றி
29.ஓம் குபேரேஸ்வரா போற்றி
30.ஓம் கேதாரீஸ்வரா போற்றி
31.ஓம் கோதுமேஸ்வரா போற்றி
32.ஓம் கோட்டீஸ்வரா போற்றி
33.ஓம் கோகானேஸ்வரா போற்றி
34.ஓம் சங்கரேஸ்வரா போற்றி
35.ஓம் சத்தியகிரீஸ்வரா போற்றி
36.ஓம் சர்வேஸ்வரா போற்றி
37.ஓம் சரண்யேஸ்வரா போற்றி
38.ஓம் சங்கமேஸ்வரா போற்றி
39.ஓம் சக்கரேஸ்வரா போற்றி
40.ஓம் சந்திரேஸ்வரா போற்றி
41.ஓம் சண்டகேஸ்வரா போற்றி
42.ஓம் சப்தேஸ்வரா போற்றி
43.ஓம் ஜம்புகேஸ்வரா போற்றி
44.ஓம் ஜலகண்டேஸ்வரா போற்றி
45.ஓம் ஜாப்பீஸ்வரா போற்றி
46.ஓம் சிவனேஸ்வரா போற்றி
47.ஓம் சித்தேஸ்வரா போற்றி
48.ஓம் சிம்ஹேஸ்வரா போற்றி
49.ஓம் ஜீவனேஸ்வரா போற்றி
50.ஓம் சுந்தரேஸ்வரா போற்றி
51.ஓம் சூலேஸ்வரா போற்றி
52.ஓம் ஸூமேஸ்வரா போற்றி
53.ஓம் சூரியேஸ்வரா போற்றி
54.ஓம் ஜெகதீஸ்வரா போற்றி
55.ஓம் செப்பேஸ்வரா போற்றி
56.ஓம் சையகேஸ்வரா போற்றி
57.ஓம் சைலேஸ்வரா போற்றி
58.ஓம் சொக்கேஸ்வரா போற்றி
59.ஓம் சோமலிங்கேஸ்வரா போற்றி
60.ஓம் சோமேஸ்வரா போற்றி
61.ஓம் ஞானேஸ்வரா போற்றி
62.ஓம் தர்ப்பாரண்யேஸ்வரா போற்றி
63.ஓம் தர்மகேஸ்வரா போற்றி
64.ஓம் தணிகாசலேஸ்வரா போற்றி
65.ஓம் தாருவணீஸ்வரா போற்றி
66.ஓம் தானேஸ்வரா போற்றி
67.ஓம் தாரணேஸ்வரா போற்றி
68.ஓம் திரியம்பகேஸ்வரா போற்றி
69.ஓம் தியாகேஸ்வரா போற்றி
70.ஓம் தீக்ஷினேஸ்வரா போற்றி
71.ஓம் தீனேஸ்வரா போற்றி
72.ஓம் துந்தரேஸ்வரா போற்றி
73.ஓம் நந்திகேஸ்வரா போற்றி
74.ஓம் நந்தீஸ்வரா போற்றி
75.ஓம் நத்தேஸ்வரா போற்றி
76.ஓம் நடேஸ்வரா போற்றி
77.ஓம் நாகேஸ்வரா போற்றி
78.ஓம் நாடுகேஸ்வரா போற்றி
79.ஓம் நீலகண்டேஸ்வரா போற்றி
80.ஓம் நீலேஸ்வரா போற்றி
81.ஓம் பத்மேஸ்வரா போற்றி
82.ஓம் பரமேஸ்வரா போற்றி
83.ஓம் பட்டீஸ்வரா போற்றி
84.ஓம் பத்திகேஸ்வரா போற்றி
85.ஓம் பாரதீஸ்வரா போற்றி
86.ஓம் பாண்டேஸ்வரா போற்றி
87.ஓம் பிரகதீஸ்வரா போற்றி
88.ஓம் பீமேஸ்வரா போற்றி
89.ஓம் பீதாம்பரேஸ்வரா போற்றி
90.ஓம் பீமசங்கரேஸ்வரா போற்றி
91.ஓம் புரானேஸ்வரா போற்றி
92.ஓம் புண்டரிகேஸ்வரா போற்றி
93.ஓம் புவனேஸ்வரா போற்றி
94.ஓம் பூதேஸ்வரா போற்றி
95.ஓம் பூரணகேஸ்வரா போற்றி
96.ஓம் மண்டலீஸ்வரா போற்றி
97.ஓம் மகேஸ்வரா போற்றி
98.ஓம் மகா காளேஸ்வரா போற்றி
99.ஓம் மங்களேஸ்வரா போற்றி
100.ஓம் மணலீஸ்வரா போற்றி
101.ஓம் மவுலீஸ்வரா போற்றி
102.ஓம் யோகேஸ்வரா போற்றி
103.ஓம் வைத்தீஸ்வரா போற்றி
104.ஓம் ராமேஸ்வரா போற்றி
105.ஓம் ரோகணேஸ்வரா போற்றி
106.ஓம் லிங்கேஸ்வரா போற்றி
107.ஓம் லோகேஸ்வரா போற்றி
108.ஓம் வேங்கீஸ்வரா போற்றி
                                                     சங்கம வழிபாடு


இறைவனை அடைய வேண்டுமானால் மூன்று விதமான வழிபாடு தேவை என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவை குருவழிபாடு, லிங்க வழிபாடு, சங்கம வழிபாடு ஆகியவை. குருவையும், கடவுளையும் வழிபட்டால் மட்டும் போதாது. சங்கம வழிபாடும் பக்திக்கு அவசியம். சங்கமம் என்பது இறையடியார்களை நாடிச்செல்வதாகும். அவர்களோடு கலந்து பழகுவதும், நல்ல விஷயங்களை விவாதிப்பதும், அன்னதானம் செய்தும் சங்கமவழிபாட்டில் அடங்கும். இதனையே பகவத் கைங்கர்யம், பாகவத கைங்கர்யம் என்று சொல்வர். பெருமாளுக்குத் தொண்டு செய்தும், பெருமாளின் அடியாருக்குத் தொண்டு செய்தும் இறையருளைப் பெறமுடியும் என்று பாகவதம் குறிப்பிடுகிறது
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…
முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான்ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.
                                 பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!




பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.
தோடு :
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன்
கூடும் .
நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.
மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.
செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .
வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிரது லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில்
இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.
வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட்
செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய்
எதிர்ப்பாற்றல் கூடும்.
ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலு வடையும்.
மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான
நோய்கள் குணமாகும். மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .
கொலுசு :
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.
மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும்.
பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.


பில்லி, சூனியம் என்பது என்ன? அதில் இருந்து கிரகங்கள் நம்மைக் காப்பாற்றுமா?



இதுபற்றி பழைய நூல்கள் கூறுகின்றன. உதாரணத்திற்கு உத்ர காலாமிர்தம் என்ற நூல் இதுபற்றி எடுத்துரைக்கிறது.கிரகங்கள் பலவீனமடையும் போது இதுபோன்ற துர் சக்திகளுக்கு ஆட்படும் நிலை உள்ளது. பில்லி, சூனியம், மந்திரம் என்பதை மறுக்க இயலாது. இதுபோன்றவற்றிற்கு ஆட்பட்டு அல்லல்படும் எத்தனையோ ஜாதகங்களை பார்த்துள்ளோம். காக்கையர் நாடி என்ற புத்தகத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அதாவது ராகு திசையில் சனி புக்தி, சனி திசையில் ராகு புக்தி, கேது தசை, மாறகத்தைத் தரக்கூடிய மாறக ஸ்தானங்கள் என்று சொல்லப்படுவது உண்டு.மேஷ லக்னத்திற்கு “இரண்டு, ஏழாம் இடத்திற்குட்பட்டவன் பாவியாகி உயிரைக் கொல்வான்” என்ற ஒரு பாடல் இருக்கிறது. அதாவது இரண்டுக்கும் ஏழுக்கும் உரியவன் பாதியாகி அந்த தசை நடக்கும்போது உயிரை எடுப்பான்.பூர்ண ஸ்தானத்திற்கும் ஆயுள் ஸ்தானம் என்பது பொதுவாக 8. எட்டாம் இடத்தில் சனி, ராகு, கேது போன்றவை உட்கார்ந்து அந்த கிரகத்தை இன்னொரு பாவ கிரகம் பார்த்து, வேறு எந்த சுப கிரகமும் பார்க்காமல் இருந்தால் அப்போது பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்படுவார்கள்.
நல்ல சக்தி வாய்ந்த தசா புக்தி நடக்கும்போது ஒருவருக்கு பில்லி, சூன்யம் வைத்தால் அது வேலை செய்யாது. ஏனெனில் அவரது தசா புக்தி பலம் வாய்ந்தததாக இருக்கிறது. ஆனால் அவருக்கு பலவீனமான தசா புக்தி நடக்கும்போது அந்த பில்லி, சூன்யமும் சேர்ந்து தொல்லை கொடுக்கும். கிரகங்கள் நல்ல நிலையில் நல்ல தசை நடக்கும்போது நல்ல மனிதர்களின் தொடர்பு ஏற்படுவது போல், கெட்ட தசை நடக்கும்போது கெட்டவைகளின் தாக்கம், பாதிப்பு ஏற்படுவது நடக்கும். எல்லாமே கிரகங்களின் அடிப்படையில்தான் நடக்கிறது.அதேபோல நல்ல தசா புக்தி நடக்கும்போது பில்லி, சூன்யம் வைத்து பாதிக்கப்பட்டதாக இதுவரை கேள்விப்பட்டதே கிடையாது. ஆனால் நல்ல தசா புக்தி நடக்கும்போதும், அஷ்டமத்து சனியினால் கெட்ட சக்திகளின் பாதிப்பு வந்து போக வாய்ப்புண்டு. கிரகங்களின் துணையில்லாமல் எதுவும் நடக்காது.ஒருவருக்கு பில்லி, சூன்யம் வைக்க வேண்டும் என்றால் அவருடைய புகைப்படமோ, வியர்வை நனைந்த அல்லது ரத்தம் நனைந்த துணியோ, தலை முடி, காலடி மண்ணோ, விந்தணு பட்ட துணியோ தேவைப்படும். இது இல்லாமல் பில்லி, சூன்யம் வைக்க முடியாது.நல்ல தசாபுக்தி நடக்கும்போது இதுபோன்ற துணிகள் கிடைக்காமலேயே போய்விடும். இல்லையென்றால் பில்லி, சூன்யம் வைக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.ஆனால் கிரகநிலை சரியில்லாத நேரத்தில் தாமாகவே இதுபோன்ற பொருட்களை அளிக்கவோ, தானாகவே சென்று சிக்குவதோ நேரிடும்
                         இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் எதற்காக


கைகேயி இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கூறுகிறாள். அதன் காரணம்:-யுகங்கள் 4 வகைப்படும். அவை கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள். இந்த கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல் ) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும, என்கிறது இந்துமத சாஸ்திரம். இந்த கருத்து துவாபர யுகத்தில் 13 ஆண்டுகள், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகள், கிருத யுகத்தில் 15 ஆண்டுகள்.இராமாயணம் நடந்த காலம் திரேதா யுகம் . இதில் தசரதனும், இராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும்.என்வே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் இராமனுக்கு பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான்.
                                            ஆறிலும் சாவு , நூறிலும் சாவு


ஆறிலும் சாவு , நூறிலும் சாவு ' என்று ஒரு பழமொழி சொல்வார்கள் . இதற்கு , சாவு ஆறிலும் வரும் , நூறிலும் வரும் என்றே நாம் எல்லோரும் பொருள் கொள்கிறோம் .
வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் , அதன் உண்மையான பொருள் இதுவல்ல .குருசேத்திர போரில் , போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி , அவனிடம் சென்று , பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறாள் . அப்போது கர்ணன் கூறுகிறான் : ' தாயே ! நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாகப் போரிட்டாலும் சரி , கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து நூறாவது ஆளாக போரிட்டாலும் சரி , இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும் . ஆகவே , ஆறிலும் சாவு அல்லது நூறிலும் சாவு . எப்படி செத்தால் என்ன ? செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் ' என்கிறான் .
இங்கே கர்ணன் கூறியதுதான் , மேற்படி பழமொழிக்கு உண்மையான பொருள்
                                           ராமபிரானும், தவளைம்


ராமபிரான் ஒருமுறை கங்கையில் குளிக்கச் செல்லும்போது தன் தோளில் இருந்த அம்புராத் துணிகளைக் கழற்றி வைத்தார் . அதில் ஒரே ஒரு அம்புமட்டுமே இருந்தது . அதைப் படுக்க வைத்துச் செல்வது வீரனுக்கு அழகானது அல்ல எனத் தரையில் குத்திவிட்டுச் சென்றார் .
குளித்து முடித்து விட்டுத் திரும்ப அந்த அம்பைத் தரையிலிருந்து பிடுங்கியபோது , ஒரு தவளை ரத்தம் வெளியேற உயிருக்குத் துடிதுடித்துக் கொண்டு அதன் நுனியில் ஒட்டி இருந்தது ! அதைக் கண்ட ராமபிரான் நெஞ்சம் பதைபதைத்து , " தவளையே ! நான் உன்னை அம்பால் குத்தியபோது நீ குரல் கொடுத்திருக்கலாமே ! ஐயோ ! பெரும் தவறு செய்து விட்டேனே ! " எனக் கலங்கினார் .
தவளை கூறியது : " எம்பெருமானே ! எனக்குப் பிறர் தீமை செய்தால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னை ' ராமா ! ராமா ! ' என அழைப்பேன் . ஆனால் , அந்த ராமனே இப்போது எனக்குத் தீங்கு செய்யும்போது நான் வேறு யாரைக் கூவி அழைப்பேன் ? " என்றது .
                                   சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்


சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. சட்டி என்றால் மண் பானை சட்டி என்று நினைத்துக் கொள்கிறோம். அது அப்படி கிடையாது. சஷ்டி திதி. அந்த சஷ்டி திதியைத்தான் தூயத் தமிழில் சட்டி திதி என்று சொல்வார்கள். இன்னமும் ஈழத் தமிழர்கள் சட்டி திதி என்றுதான் சொல்வார்கள். இங்குதான் சஷ்டி திதி என்று சொல்கிறோம்.
இந்த சட்டி திதியில் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாகக் கிடைக்கும். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பையைக் குறிக்கிறது. அந்தத் திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் கருப்பை கருத்தரிக்கும் என்பது அர்த்தம். அதனால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்றுமுன்னோர்கள்சொல்லிவைத்தார்கள்.
                      கலியுகம் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா? 


கலியுகம் மட்டுமின்றி பல்வேறு ஜோதிடத்தில் யுகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. கிருகயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற 4 யுகங்கள் பற்றியும் பண்டைய ஜோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. 
இதில் கிருகயுகம் 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் என்றும், திரேதாயுகத்திற்கு 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் என்றும், துவாபரயுகத்திற்கு 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள், தற்போது நடந்து வரும் கலியுகத்திற்கு 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் எனறும் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது கலியுகத்தில் 5,110 ஆண்டுகளே முடிந்துள்ளது.
மேற்கூறிய 4 யுகங்களிலும் கலியுகம் மிகச் சக்தி வாய்ந்தது. கலி என்றால் சனி. கலியுகம் என்றால் சனியுகம் என்றும் நம்பப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடந்து வரும் அசம்பாவிதங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பூமிப்பகுதியை கடல் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். அடுத்தடுத்து சுனாமி வரும்.
கலியுகத்தில் மக்களின் மனநிலை எப்படியெல்லாம் மாறும், மனசாட்சி இல்லாமல் ஒருவரை ஒருவர் அழித்து வாழ்வது என்பது பற்றி சில வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?

ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும். கடந்த காலங்களில் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது
அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவது உண்மையா? 

ஆழ்மனதில் (நனவிழி மனம்) உள்ள நிறைவேறாத ஆசைகள் மற்றும் தேங்கிக் கிடக்கும் எண்ணங்களே கனவுகளாக வெளிப்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜோதிட ரீதியாக அதிகாலை என்பது சுக்ரோதய காலகட்டம் என்று கூறப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அதீத ஆற்றல் கிடைக்கும். அதிகாலை 3.40 முதல் சூரிய உதயம் வரையிலான காலத்தில் சுக்கிரனின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம். இதனை பிரம்ம முகூர்த்தம் என்றும் கூறுவர். பிரம்ம முகூர்த்தத்தில் எந்தக் காரியத்தையும் துவக்கலாம்; அதற்கு நாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்று முன்னோர்கள் கூறுவர்.
காமசூத்திர நூல்களிலும் இந்தக் காலகட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம முகூர்த்த காலத்தில் உருவாகும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக, அறிவு நிறைந்தவர்களாக இருப்பர் எனக் கூறப்பட்டுள்ளது.
கனவுகளைப் பொறுத்தவரை சுக்கிரன் ஆதிக்க காலமான பிரம்ம முகூர்த்தத்தில் காணக் கூடிய கனவுகள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நல்ல கனவு, கெட்ட கனவு என இரண்டுக்குமே இது பொருந்தும்.
கோயிலில் உள்ள தெய்வச் சிலைகளை தொட்டு வணங்கலாமா?


கோயில் என்பதை மரியாதைக்குரிய இடமாக கருதுகிறோம். பொதுவாக மரியாதைக்கு உரிய மனிதர்களையே நாம் தொட்டுப் பேசுவது கிடையாது. ஒரு சில அடி தூரம் தள்ளி நின்று பவ்யமாகவே பேசுவோம்.
மரியாதைக்குரிய மனிதர்களுக்கு இவ்வளவு மதிப்பளிக்கும் நாம், இறைவனைத் தொட்டு வணங்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எனவே, தெய்வச் சிலைகளை தொடாமல் வணங்குவதே சிறந்தது.
இதற்காக சிலைகளைத் தொட்டால் பாவம், தீட்டு என்பது போல் காரணம் கற்பித்துக் கொள்ளக் கூடாது. மரியாதை நிமித்தமாகவே சிலைகளை தொடாமல் வணங்க வேண்டும் என்று கூறுகிறேன். இறைவன் மேன்மை பொருந்தியவர் என்பதையும், அவரைத் தொடும் தகுதி நமக்கு இல்லை என்பதாலும், தொடாமல் தள்ளி நின்று வணங்குவது நல்லது
                                               மகிஷாசுரனின் கதை


மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமைப்படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள்பாலிக்க, அசுரன் முன் தோன்றினார்.. சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும், படைக்கும் தொழிலில் அது சாதிதயமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்” என்று பிரம்மா கூற, அறிவிலி அசுரன், கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.
தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன், சக்தியின் மகிமையை அறியவில்லை.
வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆண்டு துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வசக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்ட தேவர்கள், தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். ச்தியாக தோன்றிய அம்பாள், அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.
இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள், ஆராதனைகள் அனைத்தும் போய் சேருவது அன்னை பராசக்தியின் திருப்பாதங்களுக்கே!
                                                       தர்மம் தலைகாக்கும்

பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும்போது ஒரு பொய்கையில்
தாகத்தால் தண்ணீர் அருந்த எல்லோரும் மரண மடைந்தனர்.
யுதிஷ்ட்ரரும் தண்ணீர் அருந்தச் செல்லும்போது யக்ஷதேவதை
நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல். பிறகு சாப்பிடலாம்
என்று சொல்லிற்று.பிறகு அதுவும் கேட்க இவரும் பதில் சொன்னார். இதற்கு யக்ஷப்ரச்னம்
எனப் பெயர்.சந்தோஷமடைந்த யக்ஷன் வரம் கொடுக்கிறேன் கேள் என்று சொல்லிற்று.இவரும், நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு யக்ஷன் சொன்னதாவது. ”போர் நடக்கும் ஸமயம்.
இப்போது பீமனையோ அர்ஜுனனையோ பிழைக்க விரும்ப வேண்டும்.
அதை விட்டுவிட்டு நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்கிறாயே”.
இது ஆச்சர்யம் என்றது.
அதற்கு விடை யுதிஷ்ட்ரர் சொன்னதாவது. தர்மம்தான் எனக்கு வேண்டும்.என் தகப்பனாரான பாண்டுவிற்கு இரண்டு மனைவிகள். குந்தி என்றும் மாத்ரீஎன்றும். அதில் குந்திக்குப் பிள்ளையாய் நான் ஜீவித்திருக்கிறேன்.
மாத்ரியின் பிள்ளை இருவரும் ஜீவிக்க வில்லை. ஆக அவளுக்கு
மூத்த பிள்ளையான நகுலன் பிழைக்கவேண்டும் என்றுப் ப்ரார்த்தித்தேன்என்றார்.
அதைக் கேட்ட யக்ஷன் உன்னுடைய தர்மபுத்தியைப் பார்த்து
சந்தோஷமடைந்தேன். நீ தர்மம் நழுவாதவன்.
ஆகையால் எல்லோரையும் பிழைக்கச் செய்கிறேன் என்று
எல்லோருக்கும் ஜீவனம் கொடுத்தான்.
இங்குதான் நாம் கவனிக்க வேண்டும். தர்ம புத்திரருடைய செயலை.
தர்மம் தலைகாக்கும் என்பது சரியாகிவிட்டதல்லவா?
                                                          அரிச்சந்திரன் கதை


.அரிச்சந்திரன் அல்லது ஹரிச்சந்திரன் இந்தியத் தொன்மக் கதை ஒன்றின் கதைத் தலைவன். இக் கதைகளின்படி இவன் சூரிய குலத்தின் 28 ஆவது அரசன் ஆவான். இவன் தனது வாழ்வில், சொன்னசொல் தவறாமை, பொய் சொல்லாமை என்னும் இரண்டு ஒழுக்கங்களையும் இறுக்கமாகக் கடைப்பிடித்து வந்தான். . தனது கொள்கைகளில் உறுதியாக நின்றமையால் வாழ்க்கையில் அவன் அடைந்த துன்பங்களையும் இறுதியில் அதனாலேயே அவன் உண்மையின் சின்னமாகப் போற்றப்படுவதையும் அரிச்சந்திரனது கதை எடுத்துக் கூறுகிறது. இளம் வயதில் தான் பார்த்த அரிச்சந்திர நாடகமே தனக்கு வாய்மையின் உயர்வை உணர்த்தியதாய் அண்ணல் காந்தியடிகள் தனது வாழ்க்கை வரலாறான “சத்திய சோதனை” நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அரிச்சந்திரன் கதை
நாடிழத்தல்
விசுவாமித்திரர் என்னும் முனிவர் அரிச்சந்திரனிடம் வந்தார். அரிச்சந்திரன் தனது கனவில் வந்து அவனது நாட்டைத் தனக்கு நன்கொடையாகத் தருவதாக வாக்களித்ததாகவும் அதனால், அந் நாட்டைத் தனக்கு அவன் தந்துவிடவேண்டும் என்று கூறினார். கனவிலாயினும், தான் வாக்குக் கொடுத்ததாக முனிவர் கூறுவதால் தன் நாட்டை அவருக்கே அரிச்சந்திரன் கொடுத்துவிட்டுத் தனது மனைவியையும் சிறுவனான மகனையும் அழைத்துக்கொண்டு அந்நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்த வாரணாசிக்குச் செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறினான்.
அடிமைகளாதல்
எனினும் முனிவர் அவனை நோக்கி, அவன் கொடுத்த தானம் நிறைவெய்துவதற்குத் தட்சிணை கொடுக்கவேண்டும் என்றார். தட்சிணையாகக் கொடுப்பதற்குக் கூட எதும் கையில் இல்லாத அரிச்சந்திரன் தன் மனைவியையும் மகனையும் ஒரு பிராமணனுக்கு விற்றான். அதனால் கிடைத்த பணமும் தட்சிணைக்குப் போதுமானதாக இல்லாதிருந்ததால் தன்னையும் சுடலை காப்போன் ஒருவனுக்கு விற்றுவிட்டான். அரசன் சுடலையில் பிணங்களை எரிப்பதற்கு உதவினான். அவனது மனைவியும் மகனும் பிராமணனின் வீட்டு வேலைக்காரர் ஆயினர். இவ்வாறு இவர்கள் மிகவும் துன்பப்பட்டனர்.
மகன் இறப்புஒரு நாள் பிராமணரின் பூசைக்காகப் பூப்பறிக்கச் சென்ற அரிச்சந்திரனின் மகன் பாம்பு தீண்டி இறந்தான். உதவி ஏதும் அற்ற அரிச்சந்திரனின் மனைவி தனியாகத் தனது மகனின் பிணத்தையும் தூக்கிக்கொண்டு புலம்பியவளாய் மயானத்துக்குச் சென்றாள். மகனின் பிணத்தை எரிப்பதற்காகச் செலுத்த வேண்டிய வரியைக் கொடுப்பதற்குக் கூட அவளிடம் பணம் இல்லை. சுடலையில் காவல் காப்போனாக இருந்த அரிச்சந்திரனோ அவனது மனைவினோ ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. வரி செலுத்தப் பணம் இல்லையெனக் கூறக்கேட்ட அரிச்சந்திரன் கண்ணில் அவள் கழுத்திலிருந்த தாலி பட்டது. அவளைப் பார்த்து அத்தாலியை விற்று வரி கட்டுமாறு அவன் கூறினான். அவளது கணவனான அரிச்சந்திரனுடைய கண்ணுக்கு மட்டுமே அவள் அணிந்திருந்த தாலி தெரியக்கூடியது என்பதனால், காவலாளியாக இருந்தவன் அரிச்சந்திரனே என அவள் அறிந்து கொண்டாள். இதனால் அரிச்சந்திரனும் தனது மனைவியை அடையாளம் கண்டுகொண்டான்.
தேவர்கள் காட்சி கொடுத்தல்
எனினும் கடமையில் கண்ணாய் இருந்த அரிச்சந்திரன் வரி இல்லாமல் பிணத்தை எரிக்க மறுத்துவிட்டான். அவனது மனைவியிடம் ஒரேயொரு சேலை மட்டுமே இருந்தது. அதில் ஒரு பாதியைக் கிழித்துத் தனது மகனின் உடலைப் போர்த்தியிருந்தாள். மற்றப்பாதியே அவளது உடலை மூடியிருந்தது. அதனை வரியாகக் கொடுத்தால் பிணத்தை எரிக்க முடியும் என அரிச்சந்திரன் ஒப்புக்கொண்டான். அவளும் அதற்கு இணங்கிச் சேலையை அவிழ்க்க முற்பட்டபோது, விஷ்ணுவும், தேவர்களும், விசுவாமித்திர முனிவரும் அவர்கள் முன் தோன்றினர். உண்மைமீது அவன் கொண்டிருந்த உறுதிக்காக அவர்கள் அவனைப் போற்றிய அவர்கள் அவனது மகனை உயிர்ப்பித்தனர்.
சுவர்க்கம் செல்லல்
அரிச்சந்திரனுக்கும் அவனது மனைவிக்கும் சுவர்க்க பதவி கொடுத்தனர் எனினும் அதனை ஏற்க அவர்கள் மறுத்தனர். தமது குடிமக்களை விட்டுவிட்டுச் செல்வது சரியல்ல என்றும் அதனால் அவர்களையும் தன்னோடு கூட்டிச்செல்ல விரும்புவதாகவும் அரிச்சந்திரன் இறைவனிடம் வேண்டினான். ஒவ்வொருவரும் தமது வினைப்பயனுக்கு ஏற்பவே சுவர்கம் செல்ல முடியும் என்று அதனால் குடிமக்களை அவன் கூட்டிச் செல்ல முடியாது என்றும் தேவர்கள் கூறினர். ஆகவே தான் செய்யத் புண்ணியங்கள் அனைத்தையும் தனது குடிகளுக்கே கொடுத்து விடுவதாகவும் அவர்களை அங்கே ஏற்றுக்கொள்ளும்படியும் அவன் வேண்டினான். தான் பூமியிலேயே தங்கிவிடவும் தீர்மானித்தான். அவனது செயலுக்காக மகிழ்ந்த இறைவன் அரிச்சந்திரனுக்கும் அவனது மனைவிக்கும் சுவர்க்கம் அளித்தார்
அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். திருமகள் கடாட்சமும் பெருகும். திருவெங்கடமுடையோனின் சன்னதியில் தினந்தோறும் காலை வேலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களை அழகுறக் கண்முன் நிறுத்துகின்ற ஆனந்த வலிமையும் சுப்ரபாதத்திற்கு உண்டு.
கலியுக தெய்வமாகிய ஸ்ரீ வெங்கநாதனை துதிப்போர் திருமகள் அருள்பெற்று வளமான வாழ்வுதனைப் பெறலாம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
ஓம் நமமோ நாராயணா
                                                                      
                                                                        நிம்மதி


முருகனுக்கு பெரும் பணம் இருந்தது. அவனுடைய அப்பா சொத்து, சுகத்தையெல்லாம் விட்டு தான் சென்றிருந்தார். பணத்துக்கு குறைவே இல்லை. ஆனால், என்ன செய்வது? வாய்த்தவள் சரியில்லை. இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களும் அம்மாவுடன் சேர்ந்து, அப்பாவின் சொல்லுக்கு மாறாக ஏறுக்கு மாறாக பேசி வந்தார்கள். இதனால், முருகனுக்கு நிம்மதி போய்விட்டது.
ஒருநாள், அவனைப் பார்க்க அவனது தந்தையின் நண்பர் வந்தார். முருகன் தனது நிலையை அவரிடம் சொல்லி அழுதான். ""எனக்கு நிம்மதியே இல்லை,'' என்று புலம்பினான். அவனது நிலை பரிதாபகரமாக தோன்றினாலும், அவனது நலன் கருதி ஒரு பாடத்தையும் கற்பிக்க நினைத்தார் பெரியவர்.
""முருகா! இதற்காக நீ கவலைப்படாதே. உனக்கு நிம்மதி வேண்டும்! அவ்வளவுதானே! அப்படிப்பட்ட ஓர் இடத்தைக் காட்டுகிறேன். அங்கு வந்தால், உனக்கு எந்தத்துன்பமும் இல்லை,'' என்றார்.
முருகனுக்கு ஏக மகிழ்ச்சி! உடனடியாக அவருடன் கிளம்பிவிட்டான்.
அவர் அவனை நேராக இடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒன்றும் புரியாமல் விழித்த முருகன், ""இங்கு ஏன் என்னை அழைத்து வந்தீர்கள்?'' என்றான்.
""நீ தானே நிம்மதியை விரும்பினாய். உலகத்தில் மனிதனாய் பிறப்பவன் நிம்மதியாய் உறங்குவது இங்குள்ள கல்லறைகளுக்குள் தான். அவன் உலகில் வாழும்வரை பிரச்னைகள் தொடரத்தான் செய்யும். அதைக் கண்டு பயந்தால், மேலும் மேலும் நிம்மதி குலையும். அவற்றை எதிர்த்து நிற்பவனை நிம்மதி தேடி வரும். அந்த சிவனைப் பார்த்தாயா! நிம்மதியான இடம் இதுதான் என்று, மயானத்திலேயே குடியிருக்கிறான். இப்போது சொல்! நீ பிரச்னைகளை சமாளித்து நிம்மதியைத் தேடப் போகிறாயா...இல்லை, இங்கே தோண்டப்பட்டுள்ள குழிகளுக்குள் புதைந்து கொள்ளப் போகிறாயா?'' என்றார்.
முருகனுக்கு புத்தி வந்தது.
""உண்மை தான்! நான் எனக்கு மட்டுமே பிரச்னைகள் இருக்கிறது என நினைத்தேன். உலகில் ஒவ்வொருவரும் பிரச்னையுடன் தான் இருக்கிறார்கள். பிரச்னைகளைக் கண்டு ஓடக்கூடாது. நம் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் புத்தி சொல்வோம், கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் பட்டு திருந்தட்டும்,'' என விட்டுவிட்டான். இப்போது, அவன் நிம்மதியாக இருக்கிறான்.
                                    
                                      தீபாராதனை தத்துவ விளக்கம்


கோவில்களுக்குச் செல்பவர்கள் ஏதோ தீபாராதனை விதவிதமாகக் காட்டப்படுகிறது என்று நினைத்து விடாமல்- இதன் மூலம் ஆன்மா எல்லையற்ற பரந்த வெளியில் நிறைந்திருக்கும் இறைவனிடமிருந்து முதலில் ஒலியாகவும், பின்னர் ஒளியாகவும், அதிலிருந்து படிப்படியாக உலகமாகவும், அதில் நிறைந்த உயிர்களாகவும் தோன்றுவதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி மூலமான இறைவனிடம் தோன்றிய ஆன்மா உலகை அடைந்து இங்குள்ள உலக விவகாரங்களில் சிக்கிக் கொள்கிறது. அதில் சிக்கிக் கொள்ளாத ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதைக் குறிக்கும் வகையில் வேதங்கள் முழங்கப்படுகின்றன. இறைவனின் வார்த்தை களான வேதத்தின் வழி செல்லும்ஆன்மா தன்னை உணர்ந்து கொண்டு படிப்படியாக முன்னேறு கிறது. இதையே ஒன்று முதல் பத்து வரையில் உள்ள தீபங்கள் குறிப்பிடு கின்றன. நற்குணங்களால் நிறையப் பெற்ற ஜீவனை எட்டு திசைகளில் உள்ளவர் களும் வாழ்த்துகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் குடை, அடுக்கு தீபம், சாமரம் ஆகியவை காட்டப் பெறுகின்றன.பின்னர் கற்பூர தீபம் காட்டப்படுகிறது. இதுவே பூரண நிலை எய்திய ஜீவனின் நிலையாகும். கற்பூரம் எரிந்து காற்றில் கலந்து விடுவதைப்போலவே, ஜீவனும் தன் பாசப் பிணைப்பை உதறிவிட்டு பகவானோடு ஐக்கியமாவதை இதனால் உணர்ந்துகொள்ள வேண்டும். பின்னர் விபூதி அளிக்கப்படுகிறது. இதுவரை நிகழ்ந்த உலகத்தின் தோற்றத்தையும் இறுதியில் அது ஒடுங்கி விட்டதையும் குறிக்கும் வகையில் நெருப்பின் மீதியான சாம்பல் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
                                                                குத்துவிளக்கு



குத்து விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும் குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி,
வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.
மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம் பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டு.
தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.
விளக்கின் மகிமை
. நாள் தோறும் இல்லத்தில்
தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும். விளக்கேற்றும் முகத்தின் பலன்
குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன்
குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை
குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்- புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி
குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால் - பசு, பால், பூமி, சேர்க்கை
குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் - பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது.
குத்து விளக்கை தானாக அணையவிடக்கூடாது. ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தால் அணைக்க வேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
தீப வழிபாட்டின் சிறப்பியல்புகள்
பசு நெய்: செல்வம் பெருகும்
நல்லெண்ணெய்: உடல் ஆரோக்கியம்
விளக்கெண்ணெய்: புகழ் தாம்பத்திய சுகம்
இலுப்பெண்ணெய்: ஜீவ சுகம், ஞானம்
புங்க எண்ணெய்: முன்னோர்களின் ஆசி.
மேற்கூறிய ஐந்து வகையான எண்ணெய்கள் கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் குடும்பத்தில் மேற்கூறிய நன்மைகளும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

வெள்ளி, 10 ஜூலை, 2015

                                                                  ருத்ராட்சம்


ருத்ராட்சத்தைப் பற்றிய குறிப்புகள் சிவபுராணம், தேவி பாகவதம், லிங்கபுராணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. திரிபுராசுரன் என்ற அரக்கனைக் கொன்று, தேவர்களைக் காப்பதற்காக சிவபெருமான் கண்களைத் திறந்தபடி தவமிருந்தார்.
தவத்தின் முடிவில் கண்களை மூடியபோது, அதில் இருந்து விழுந்த துளிகளில் ருத்ராட்சம் உற்பத்தியானது. ருத்ராட்சம் என்ற சொல்லுக்கு "சிவனின் கண்கள்' என்று பொருள். நேபாளத்தில் ருத்ராட்ச மரங்கள் அதிகளவில் இருக்கிறது.
முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?


நமக்கு நல்வழி காட்டியவர்களின் படங்களை பூஜை அறையில் தாராளமாக வைத்து வழிபடலாம். தாய், தந்தை, குருநாதர் இவர்கள் நமக்க நல்வழி காட்டியவர்கள். தெய்வத்துக்கு ஒப்பானவர்கள். இவர்களை வைத்து வழிபடலாம்.
தெய்வங்கள் கைகளால் காட்டும் முத்திரையின் நோக்கம் என்ன?



ஒவ்வொரு முத்திரைக்கும் ஒரு பெயருண்டு. அபய முத்திரை என்பது பயப்படாதே! உடன் உடனிருந்து காப்பாற்றுகிறேன் என்பதையும், வரதமுத்திரை என்பது, உன் விருப்பத்தைக் கேள். வரம் தருகிறேன் என்பதையும் குறிக்கிறது. தட்சிணாமூர்த்தி காட்டும் ஞானமுத்திரை என்பது கட்டை விரலின் அடியில் ஆள்காட்டி விரலை வைத்து, மற்ற மூன்று விரல்களையும் மேல்நோக்கியவாறு இருப்பதாகும். இதில் கட்டை விரல் இறைவன். ஆள்காட்டி விரல் மனிதன். மற்ற மூன்று விரல்களும் உலக வாழ்வின் ஆசாபாசம், இன்பம், துன்பத்தை குறிக்கும். இன்ப துன்பத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி மனிதன் கடவுளைச் சரணடைந்தால் பேரின்பம் உண்டாகும் என்பதே இதன் தத்துவம். இப்படி ஒவ்வொரு முத்திரைக்கும் தனித்தனி தத்துவங்கள் இருக்கின்றன.
                                                   விஷ்ணுவின் வாகனம்................................


பெரிய திருவடி என்று போற்றுகிறது. எம்பெருமான் எத்தனையோ வாகனங்களில் பவனி வந்தாலும், அவரை கருடவாகனத்தில் தரிசிப்பதே அதிக நன்மை தரும் புண்ணிய தரிசனம் என்று சிறப்பிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அருள பகவான் எப்போது புறப்படுவாரோ என்று எப்போதுமே தயாராக இருப்பதால், பகவானே இவர் மீது தனி அன்பு செலுத்துவதாக புராணங்கள் சொல்கின்றன. இறைவன் திருவடியை எப்போதும் சுமக்கும் பெரும்பேறு பெற்ற கருடதேவனைப் போற்றும் திருநாளே கருட பஞ்சமி. இந்த வருடம் 1.8.2014 அன்று கருட பஞ்சமி. கருட பகவானின் பெருமைகளையும், அடியார்களுக்கு இரங்கும் அருள் உள்ளத்தையும் கருடபுராணம் விரிவாகக் கூறுகிறது.
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன். பறவைகளுக்கு அரசனாகவும், திருமாலுக்குச் சேவை செய்யும் போது பெரிய திருவடியாகவும், தன்னை உபாசிப்பவர்களுக்கு அருள் நல்கும் விஷ்ணு அம்சமான கருட பகவானாகவும் அவர் விளங்குகிறார். வைணவத்தில் உபாஸனா மார்க்கத்தில் ஒரு குறிப்பிட்ட லட்சத்திற்காக பரம்பொருளை வேண்டி அணுகும் நெறிகளுள் கருட உபாசனை முக்கியமானது. வல்வினைகளில் இருந்து, விஷ ஜந்துகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்தும் விடுபட கருடபகவானை வழிபடுவது சிறந்தது என புராண நூல்கள் விவரிக்கின்றன.
கருட உபாசனை மூலம் வேதாந்த தேசிகர் கவித்துவம் பெற்றதாகக் கூறுவர். திருவஹீந்திரபுரம் கருட க்ஷேத்திரம் எனப்படுகிறது. நாடாண்ட மன்னர்கள் பலரும் கருடனிடம் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதை உணர்த்தும் வகையில் வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. கருடன் எம்பெருமானுக்கு எல்லா அவதாரங்களிலும் உதவக்கூடியவனாக இருந்தான். இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் மயங்கிக் கிடந்த ராமலட்சுணர்கள், ஆகாயத்தில் பறந்த கருடனின் இறக்கைக் காற்றால் புத்துணர்ச்சி பெற்று யுத்தத்தில் ஈடுபட்டனர். கண்ணபிரான் பாதாள லோகத்தில் அனிருத்தனுடன் சண்டையிட்ட போது, இரு இறக்கைகளையும் பறக்க விரித்து உதவினான். ஆதிமூலமே எனக் கதறிய கஜேந்திரனைக் காப்பாற்ற மகாவிஷ்ணுவின் வாகனமாகச் சென்று உதவினான். வாகனத்தில் கருடனைப் பார்ப்பதும், அவன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். சில்பா மிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக சமயத்தில் இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமைகளையுடைய கருடனை தரிசிப்பதும், கருட பஞ்சமி விரதத்தைக் கடைப்பிடிப்பதும் சகல பலன்களையும் தரும் என்பதில் ஐயமில்லை.
                                                      மங்கள ஆரத்தி !!


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.
ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.
அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்
கோவில்களில் புதைந்திருக்கும் அறிவியல் அதிசயங்கள்




பல்வேறு இனங்கள், சமயங்கள், மதங்கள் இணைந்த நாடு தான் இந்தியா.
இங்கு ஒவ்வொரு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இனத்திற்கு ஏற்றவாறு கோயில்களை கட்டி வழிபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் லட்சக்கணக்கான கோயில்கள் இருந்தாலும், அவை எந்த அமைப்பில் அல்லது எந்த வழியில் கட்டப்பட்டுள்ளன என்று பார்த்தால் அவை ஒரு அதிசயமே,
கோவில்கள் பூமியின் காந்த அலை எங்கு அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும், அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை என எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்.
மேலும், கடவுள் இருக்குமிடமான மூலஸ்தானத்தில் சிலையை வைத்த பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும், இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்,
ஏனெனில் காந்த அலைகளை அது சுற்றிம் பரப்பும், ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார், அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும், இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை,
கர்ப்பக்கிரகம் மூன்று திசையில் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும், மூலஸ்தானத்திலிருந்து விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும், மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும், இது மன அழுத்தத்தினைக் குறைக்கும்,
மேலும், கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களை சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாக்குவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது.
அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள், இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் போன்றவற்றினை போக்கவல்லது,
மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும், எனவே தான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.
                                                      .....................சிவன்...................................
சிவன் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெரும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் , இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தேற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவனையும் அழித்து தன்னுள் ஒடுக்கி சிவன் மட்டும் நிலையாக இருப்பதாக சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.
இவரை வழிபடும் வழக்கம் வரலாற்றுக்கு முற்பட்டதெனவும், சிந்து மொகெஞ்சதாரோ நாகரீங்களில் இவரை வழிபாடு செய்தமைக்கான அடையளங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் தமிழர்களின் ஐந்தினை தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது.
இவர் நடனம், யோகா என கலைகளில் சிறந்து விளங்குபவராகவும், உமையம்மையுடன் கையிலை மலையில் வசிப்பதாகவும் சைவர்களாலும், இந்துக்களாலும் நம்பப்படுகிறது. உமையம்மை தட்சனின் புதல்வி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்து சிவனை மணந்து, பின் தட்சனின் யாகத்தில் விழுந்து இறந்ததாகவும், பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்து சிவனை மணந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமான் பார்வதி தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற குழந்தைகளும் உள்ளனர். அத்துடன் சிவபெருமான் தட்சனை அழிக்க தோற்றுவித்த வீரபத்திரனும், திருமால் மோகினியாக அவதாரம் எடுத்த போது பிறந்த ஐயப்பனும் சிவ குழந்தைகளாக கருதப்படுகிறார்கள்.
* அடையாளங்கள்
சிவபெருமான் ஞானக்கண் என்று கூறப்படும் நெற்றிக்கண்ணை உடையவர், அவருடைய ஆயுதமாக திரிசூலம் உள்ளது. அதனுடன் இசைக்கருவியான உடுக்கை (டம்டம்) இணைந்துள்ளது. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர். மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார்.
தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்க சிவபெருமான் திகம்பர மூர்த்தியாக சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். அடுத்து யானையை அனுப்பினர், அதன் தோலினையும் உரித்திக் கொண்டார். கொலையாயுதமான மழுவினை எய்தனர், அதனை தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாக சிவபெருமான் இணைத்துக் கொண்டார். சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார். பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோலை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார்.
காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றை சிவபெருமான் ஆபரணங்களாக தரித்துக் கொண்டார். பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு)வாசுகி பாம்பினால் கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர் என்பனவெல்லாம் சிவபெருமானின் அடையாளங்களாக கூறப்படுகிறது.
* குணநலன்கள்
சிவபெருமான் இல்லறத்தில் யோகியாக வாழ்பவராகவும், கையிலையிலும், மயானத்திலும் வசிப்பவராகவும், அரக்கர்கள் தேவர்கள் என தன்னை நினைத்து தியானிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் கேட்கும் வரங்களை கொடுப்பவராகவும், பாவங்களில் பெரிய பாவமான பிரம்மஹத்தி தோசத்தினை நீக்கும் வல்லமை உடையவராகவும் கூறப்படுகிறார்.
தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங் களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார். என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.
* வழிபாடு
சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை
*) காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
*) நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
*) மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
*) அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.
* சிவனின் ஐந்து முகங்கள்
. சத்யோ சோதம்
. வாமதேவம்
. அகோரம்
. தற்புருடம்
. ஈசானம் இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.
பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
* சிவ அவதாரங்கள்
சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், சிவபெருமான் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்மபுராணம் கூறுகிறது. அவையாவன, ஸ்வேதா, சுதாரா, மதனன், சுஹோத்திரன், கங்கணன், லோகாக்ஷி, ஜெய் கிஷ்ஹவ்யன், தாதிவாகன், ரிஷபன், பிருகு, உக்கிரன், அத்திரி, கவுதமன், வேதசீர்ஷன், கோகர்ணன், ஷிகந்தகன், ஜடமாலி, அட்டஹாசன், தாருகன், லங்காலி, மகாயாமன், முனி, ஷுலி, பிண்ட முனீச்வரன், ஸஹிஷ்ணு, ஸோமசர்மா, நகுலீஸ்வரன் என்பனவாகும்.
இவற்றில் நகுலீஸ்வரன் என்பவர் பாசுபத சைவத்தின் ஒரு பிரிவான நகுலீச பாசுபதத்தினை உருவாக்கியவர் ஆவார்.