வியாழன், 30 ஜூன், 2011

பெற்றோர்கள் கொந்தளிப்பு

கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் இறந்துள்ளதாக கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் அடுத்தடுத்து 17 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளன. இந்த தகவலை மருத்துவமனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இன்று காலை அம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 9 மாத குழந்தை இறந்ததது. இதையடுத்து அந்த குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் அஜாக்கிரதையால் தான் குழந்தை இறந்தது என்று கூறி மருத்துவர்களையும் தாக்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே மருத்துவமனையில் 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் இறந்துள்ளது அப்பகுதி மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தான் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

 காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் சீமான், அதை ஏன் தமிழகத்தில் செய்கிறார்? பேசாமல் கொழும்பு சென்று மகிந்த ராஜபக்ஷேவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யலாமே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர்-கம்-அரசியல்வாதி எஸ்.வி.சேகர்.
பவானியில் பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், சீமான் பற்றிக் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு எதிராக பிரசாரம் செய்வதுடன் சீமான் நிறுத்திக்கொள்ளக் கூடாது என்று கூறிய எஸ்.வி.சேகர், “ஸ்ரீலங்காவில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும்போது, சீமான், ராஜபக்ஷேக்கு எதிராகப் போட்டியிடவும் வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, “திமுக – காங்கிரஸ் கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. பெரும்பாலான வாக்காளர்கள் மாற்றத்தையே விரும்பினர். சிறப்பாக செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசு, கடந்த 2001-06ம் ஆண்டு போல நல்லாட்சி செய்யும்” என்றார்.
இந்த எஸ்.வி.சேகர், அ.தி.மு.க. டிக்கெட்டில் வெற்றிபெற்றார். அதன்பின் அ.தி.மு.க.வை திட்டினார். காங்கிரஸ் கட்சிக்குப் போகலாமா என்று யோசிப்பதாகக் கூறினார். திடீரென, தி.மு.க.வின் உட்கட்சிக் கூட்டமொன்றில் தலையைக் காட்டினார்.
எங்கே இந்தப் பக்கம் என்று கேட்டதற்கு, “சும்மா பார்வையாளராகச் வந்தேன்” என்றார்.
இப்போது மீண்டும் ஒரு ரவுன்ட் அடித்து, “அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாதம் மும்மாரி பெய்யும். அ.தி.மு.க. நல்லாட்சி செய்யும்” என அருள்வாக்கு சொல்கிறார்.
பவானியில் பத்திரிகையாளர்களிடம் அவர் அரசியல் கருத்துக்களை வாரி வீசியபின், சினிமா பற்றியும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அப்போது அவர் தெரிவித்த தகவல்களில் ஒன்று, இவர் 1982ல் கதாநாயகனாக நடித்த ‘மணல் கயிறு’ படத்தின் பாகம்-2 தற்போது தயாராகிறதாம். அதில் இவரும் நடிக்கிறாராம்.
‘மணல் கயிறு’ பாகம்-2 ஐ, ஏன் திரைப்படமாக எடுக்க வேண்டும்?  சேகரின் அரசியலே ஒரு மணல் கயிறுதானே!