ஞாயிறு, 26 ஜூலை, 2015

                                                திரிபுரசுந்தரி என்றால் என்ன?


"திரிபுரம்' என்றால் "மூன்று உலகங்கள்'. தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் என்பவை அவை. "சுந்தரி' என்றால் "அழகி'. மூன்று உலகங்களிலும் சிறப்பான அழகியாக உள்ள பார்வதிதேவி என்பதே இதன் பொருள். அவளை ராஜராஜேஸ்வரி என்றும் அழைப்பர். இதற்கு "உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் அதிகாரம் உள்ளவள்' என்று பொருள். அவளை "விசாலாட்சி' என்றும், "உலகாம்பிகை' என்றும் அழைப்பர். இதனால் தான். "பரந்து விரிந்த உலகை சொந்தமாகக் கொண்டவள்' என்று இதற்குப் பொருள்
                                                      எலுமிச்சை மகிமை



வீடானாலும், கோவில் என்றாலும் அங்கே எலுமிச்சையின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதற்கு காரணம் அந்த பழத்தில் உள்ள அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களே. வீட்டில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எலுமிச்சை உடல் நலத்தை பாதுகாக்கிறது. கோவில்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சப்பழ மாலையும், எலுமிச்சை விளக்கும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளனர். எலுமிச்சை கனிகள் மருத்துவ குணம் கொண்டவை
.                                                            இரக்கம்.......................
அரக்கர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்களின் இருப்பிடம் எது என்றெல்லாம் தேட வேண்டாம். இரக்கம் இல்லாத நெஞ்சினர் அரக்கர் என்கிறார் கம்பர். இங்கு என்பதற்கு எதிர்ப்பதம் அங்கு என்பது போல, இரக்கம் என்பதற்கு எதிர்ப்பதம் அரக்கம். ஒருமுறை மன்னர் விக்ரமாதித்தர், காட்டுப் பகுதியில் குதிரையில் சென்று கொண்டிருந்தார். சற்று துõரத்தில் பசு ஒன்று பெரும் சேற்றில் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதை.... வெளியே கொண்டு வர, மன்னர் கடுமையாக முயற்சித்தார். முயற்சி வீணானது. பொழுது சாயும் நேரம்.... மன்னர் திகைத்த வேளையில்.... உறுமல் சத்தம் கேட்டது. பசுவை எப்படி காப்பாற்றுவது என்று சிந்தித்த நேரத்தில், மன்னர் திரும்பிப் பார்த்தார். அங்கே..... ஒரு சிங்கம் பசுவின் மீது பாயத் தயாராக இருந்தது. அதைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் மன்னருக்கு உண்டானது. வாளை உருவிக் கொண்டு, சிங்கத்தை எதிர்கொள்ளத் தீர்மானித்தார். அவ்வப்போது சிங்கம் பசுவை நோக்கிப் பாய்வதும், அதை மன்னர் தடுப்பதுமாக இரவுப்பொழுது போய்க் கொண்டிருந்தது.
அப்போது..... அங்கிருந்த மரத்தில் இருந்த ஒரு கிளி விக்ரமாதித்தரிடம், மன்னா! ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்? சேற்றில் அகப்பட்ட பசு, எப்படியும் இறக்கத் தான் போகிறது. நீ களைத்து இருக்கும் போது, சிங்கம் உன் மீது பாய்ந்து உன்னைக் கொன்று விட்டால், என்ன செய்வாய்? ஆகையால், பசுவைக் காப்பாற்றுவதை விடு! நீ பாதுகாப்பாக இரு! உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்! என்றது. மன்னர் மறுத்தார். கிளியே! நீ எனக்கு அதர்மமான வழியைக் காட்டாதே. எல்லா ஜீவராசிகளும் தான், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றன. ஆனால், அடுத்தவரைக் காப்பதற்காக, எவனொருவன் தன் உயிரைக் கொடுக்கிறானோ அவனே புண்ணியத்தை சம்பாதிக்கிறான். தலைவன் இல்லாத படை, எப்படி பயனில்லாமல் போகுமோ, அது போல இரக்கம் இல்லாத புண்ணிய செயலும் வீண் தான் என்றார். அதே விநாடியில்.... பொழுது விடிந்தது. பசு, சிங்கம், கிளி மூன்றையும் காணோம். அங்கே இந்திரன், தர்ம தேவதை, பூமாதேவி ஆகியோர் இருந்தார்கள். விக்ரமாதித்தா! உன் இரக்கம் கண்டு மகிழ்ந்தோம், என்று வாழ்த்தி, காமதேனுப் பசுவை பரிசாக அளித்து மறைந்தார்கள். இரக்கமே இன்பத்திற்கான திறவுகோல்.....!
திருநீறு சொல்லும் தத்துவம்



நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும். ஆனால், நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும்? அது சாம்பலாகவே இருக்கும். எந்த மாற்றமும் அடையாது.
இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறோம். மாற்றங்களைக் கடந்தவர் கடவுள். பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்கள் சொல்கின்றன. கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும்.
கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்து விடும். பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசுகிறோம்.
விபூதி தரிக்கும் முறை:
காலை மாலைகளில் குளித்தவுடனும், பூஜைக்கு முன்னும், ஆலய வழிபாட்டிற்கு முன்னும், உணவு உண்பதற்கு முன்னும், விபூதி அணிதல் வேண்டும்.
வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக நின்று, பூமியில் விபூதி சிந்தாமல், மூன்று விரல்களால் எடுத்து, அண்ணாந்து "சிவ சிவ'' எனக் கூறித் திருநீற்றுப்பதிகம் பாடி சிவனைத் தியானித்து நெற்றியில் அணிய வேண்டும்.
                                                            சிவலிங்கம்


சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் பாணம் இருக்கும். இதுவே சிவபாகமாகும். சிவன் நெருப்பு வடிவானவர். நெருப்பு எந்த நிலையிலும் மேல்நோக்கியே எரியும். நடுபாகமான ஆவுடையார் விஷ்ணு பாகம். விஷ்ணு தண்ணீருக்கு அதிபதி. பாணத்தில் அபிஷேகம் செய்யும் நீரை விஷ்ணு தாங்குகிறார். லிங்கத்தின் அடிப்பாகத்தை "பிரம்ம பகுதி' என்பர். பிரம்மா பூமிக்கு அதிபதி. எனவே அடிபாகம் பூமியில் புதைத்து வைக்கப்படுகிறது. ஆக, லிங்கத்தை வழிபட்டால் முப்பெரும் தெய்வங்களையும் வணங்கியதாக அர்த்தமாகிறது.
                                                          சிவன் 108 போற்றி


சிவாலயங்களில் சுவாமி பவனி வரும் போது, பக்தர்கள் இந்த 108 போற்றியை பாடியபடி வலம் வரலாம். திங்கள்கிழமைகளில் காலை, மாலையில் விளக்கேற்றியதும் வீட்டில் வைத்தும் ஒருவர் சொல்ல, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் தொடர்ந்து சொல்லலாம். பத்து நிமிட நேரமே ஆகும்.
1.ஓம் அகிலேஸ்வரா போற்றி
2.ஓம் அகிலாண்டீஸ்வரா போற்றி
3.ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
4.ஓம் அம்பிகேஸ்வரா போற்றி
5.ஓம் அமுதீஸ்வரா போற்றி
6.ஓம் அமரேஸ்வரா போற்றி
7.ஓம் அனாதீஸ்வரா போற்றி
8.ஓம் அருணாசலேஸ்வரா போற்றி
9.ஓம் அத்தீஸ்வரா போற்றி
10.ஓம் அந்தகேஸ்வரா போற்றி
11.ஓம் அசரேஸ்வரா போற்றி
12.ஓம் ஆதீஸ்வரா போற்றி
13.ஓம் ஆனந்தீஸ்வரா போற்றி
14.ஓம் அவர்த்தேஸ்வரா போற்றி
15.ஓம் ஏகாம்பரேஸ்வரா போற்றி
16.ஓம் ஓங்காரேஸ்வரா போற்றி
17.ஓம் கடம்பேஸ்வரா போற்றி
18.ஓம் கங்கேஸ்வரா போற்றி
19.ஓம் கபாலீஸ்வரா போற்றி
20.ஓம் கார்த்தமேஸ்வரா போற்றி
21.ஓம் காரணீஸ்வரா போற்றி
22.ஓம் காளத்தீஸ்வரா போற்றி
23.ஓம் காமேஸ்வரா போற்றி
24.ஓம் கும்பேஸ்வரா போற்றி
25.ஓம் குற்றாலீஸ்வரா போற்றி
26.ஓம் குஸ்மேஸ்வரா போற்றி
27.ஓம் குமாரேஸ்வரா போற்றி
28.ஓம் குஞ்சேஸ்வரா போற்றி
29.ஓம் குபேரேஸ்வரா போற்றி
30.ஓம் கேதாரீஸ்வரா போற்றி
31.ஓம் கோதுமேஸ்வரா போற்றி
32.ஓம் கோட்டீஸ்வரா போற்றி
33.ஓம் கோகானேஸ்வரா போற்றி
34.ஓம் சங்கரேஸ்வரா போற்றி
35.ஓம் சத்தியகிரீஸ்வரா போற்றி
36.ஓம் சர்வேஸ்வரா போற்றி
37.ஓம் சரண்யேஸ்வரா போற்றி
38.ஓம் சங்கமேஸ்வரா போற்றி
39.ஓம் சக்கரேஸ்வரா போற்றி
40.ஓம் சந்திரேஸ்வரா போற்றி
41.ஓம் சண்டகேஸ்வரா போற்றி
42.ஓம் சப்தேஸ்வரா போற்றி
43.ஓம் ஜம்புகேஸ்வரா போற்றி
44.ஓம் ஜலகண்டேஸ்வரா போற்றி
45.ஓம் ஜாப்பீஸ்வரா போற்றி
46.ஓம் சிவனேஸ்வரா போற்றி
47.ஓம் சித்தேஸ்வரா போற்றி
48.ஓம் சிம்ஹேஸ்வரா போற்றி
49.ஓம் ஜீவனேஸ்வரா போற்றி
50.ஓம் சுந்தரேஸ்வரா போற்றி
51.ஓம் சூலேஸ்வரா போற்றி
52.ஓம் ஸூமேஸ்வரா போற்றி
53.ஓம் சூரியேஸ்வரா போற்றி
54.ஓம் ஜெகதீஸ்வரா போற்றி
55.ஓம் செப்பேஸ்வரா போற்றி
56.ஓம் சையகேஸ்வரா போற்றி
57.ஓம் சைலேஸ்வரா போற்றி
58.ஓம் சொக்கேஸ்வரா போற்றி
59.ஓம் சோமலிங்கேஸ்வரா போற்றி
60.ஓம் சோமேஸ்வரா போற்றி
61.ஓம் ஞானேஸ்வரா போற்றி
62.ஓம் தர்ப்பாரண்யேஸ்வரா போற்றி
63.ஓம் தர்மகேஸ்வரா போற்றி
64.ஓம் தணிகாசலேஸ்வரா போற்றி
65.ஓம் தாருவணீஸ்வரா போற்றி
66.ஓம் தானேஸ்வரா போற்றி
67.ஓம் தாரணேஸ்வரா போற்றி
68.ஓம் திரியம்பகேஸ்வரா போற்றி
69.ஓம் தியாகேஸ்வரா போற்றி
70.ஓம் தீக்ஷினேஸ்வரா போற்றி
71.ஓம் தீனேஸ்வரா போற்றி
72.ஓம் துந்தரேஸ்வரா போற்றி
73.ஓம் நந்திகேஸ்வரா போற்றி
74.ஓம் நந்தீஸ்வரா போற்றி
75.ஓம் நத்தேஸ்வரா போற்றி
76.ஓம் நடேஸ்வரா போற்றி
77.ஓம் நாகேஸ்வரா போற்றி
78.ஓம் நாடுகேஸ்வரா போற்றி
79.ஓம் நீலகண்டேஸ்வரா போற்றி
80.ஓம் நீலேஸ்வரா போற்றி
81.ஓம் பத்மேஸ்வரா போற்றி
82.ஓம் பரமேஸ்வரா போற்றி
83.ஓம் பட்டீஸ்வரா போற்றி
84.ஓம் பத்திகேஸ்வரா போற்றி
85.ஓம் பாரதீஸ்வரா போற்றி
86.ஓம் பாண்டேஸ்வரா போற்றி
87.ஓம் பிரகதீஸ்வரா போற்றி
88.ஓம் பீமேஸ்வரா போற்றி
89.ஓம் பீதாம்பரேஸ்வரா போற்றி
90.ஓம் பீமசங்கரேஸ்வரா போற்றி
91.ஓம் புரானேஸ்வரா போற்றி
92.ஓம் புண்டரிகேஸ்வரா போற்றி
93.ஓம் புவனேஸ்வரா போற்றி
94.ஓம் பூதேஸ்வரா போற்றி
95.ஓம் பூரணகேஸ்வரா போற்றி
96.ஓம் மண்டலீஸ்வரா போற்றி
97.ஓம் மகேஸ்வரா போற்றி
98.ஓம் மகா காளேஸ்வரா போற்றி
99.ஓம் மங்களேஸ்வரா போற்றி
100.ஓம் மணலீஸ்வரா போற்றி
101.ஓம் மவுலீஸ்வரா போற்றி
102.ஓம் யோகேஸ்வரா போற்றி
103.ஓம் வைத்தீஸ்வரா போற்றி
104.ஓம் ராமேஸ்வரா போற்றி
105.ஓம் ரோகணேஸ்வரா போற்றி
106.ஓம் லிங்கேஸ்வரா போற்றி
107.ஓம் லோகேஸ்வரா போற்றி
108.ஓம் வேங்கீஸ்வரா போற்றி
                                                     சங்கம வழிபாடு


இறைவனை அடைய வேண்டுமானால் மூன்று விதமான வழிபாடு தேவை என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவை குருவழிபாடு, லிங்க வழிபாடு, சங்கம வழிபாடு ஆகியவை. குருவையும், கடவுளையும் வழிபட்டால் மட்டும் போதாது. சங்கம வழிபாடும் பக்திக்கு அவசியம். சங்கமம் என்பது இறையடியார்களை நாடிச்செல்வதாகும். அவர்களோடு கலந்து பழகுவதும், நல்ல விஷயங்களை விவாதிப்பதும், அன்னதானம் செய்தும் சங்கமவழிபாட்டில் அடங்கும். இதனையே பகவத் கைங்கர்யம், பாகவத கைங்கர்யம் என்று சொல்வர். பெருமாளுக்குத் தொண்டு செய்தும், பெருமாளின் அடியாருக்குத் தொண்டு செய்தும் இறையருளைப் பெறமுடியும் என்று பாகவதம் குறிப்பிடுகிறது